என்னது விக்ரம் 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஆசைப்பட்டாரா? டிரெண்டாகும் த்ரோபேக் பேட்டி!

சென்னை: விக்ரம் 2 படத்தைத் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்கிற பெயரில் எடுத்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக கமல் மற்றும் ரோலெக்ஸ் சூர்யா மோதப் போகும் படத்திற்கு விக்ரம் 3 என்றே டைட்டில் சொல்கின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு முன்னாடியே விக்ரம் 2 படத்தை இயக்க ஆசைப்பட்டு இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மங்காத்தா, மாநாடு

மங்காத்தா, மாநாடு

இயக்குநர் வெங்கட் பிரபு இளம் நடிகர்களை வைத்து செம ஜாலியாக சென்னை 28, சரோஜா, என படங்களை இயக்கி வந்தார். நடிகர் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் அவருக்கும் அஜித்துக்கும் மிகப்பெரிய மைல் ஸ்டோன் படமாக மாறியது. கடந்த ஆண்டு சிம்புவுக்கு சரியான கம்பேக் படமாக மாநாடு படத்தை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு.

வசூல் மன்னன் விக்ரம்

வசூல் மன்னன் விக்ரம்

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பாகுபலி 2 படத்தையே வசூலில் ஓடவிட்டு இருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். ரஜினிகாந்த், விஜய், அஜித் என கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் செய்ய முடியாத சாதனையை 4 ஆண்டுகள் படமே கொடுக்காத நம்மவர் வந்து நான் இருக்கேன் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்ற என கெத்துக் காட்டி விட்டார். அதற்கு முழு காரணமும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதை விட கமலின் பழைய விக்ரம் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வந்தபோது தான் லோகேஷ் கனகராஜ் பிறந்தே இருக்கிறார். கமலின் படங்களை பார்த்து வளர்ந்தே வங்கி ஊழியர் வசூல் இயக்குநராக மாறி இருக்கிறார்.

விக்ரம் 2வை இயக்க

ஆனால், விக்ரம் 2 படத்தை லோகேஷ் கனகராஜுக்கு முன்பாகவே இயக்க ஆசைப்பட்டு இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி பழைய த்ரோபேக் பேட்டியில் கமலுடன் இணைந்து படம் பண்ண ஆசைப்படுகிறேன் என்று வெங்கட் பிரபு சொன்னதை கேட்ட டிடி என்ன மாதிரியான படம் பண்ணுவீங்க எனக் கேட்க, விக்ரம் பார்ட் 2 படம் பண்ண ஆசை அந்த படம் இண்டியானா ஜோன்ஸ் பட ரேஞ்சுக்கு இருக்கும் எனக் கூறிய பேட்டியை தற்போது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சேர்ந்து பண்ணுங்க

சேர்ந்து பண்ணுங்க

மங்காத்தா, மாநாடு என வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா, சிவகார்த்திகேயன் படங்களை இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த பேட்டியை பார்த்த ரசிகர்க்ள் கமலுடன் இணைந்து வெங்கட் பிரபு ஒரு படம் பண்ணனும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X