»   »  மறுபடியும் நடிப்பிலிருந்து.... அப்போ டைரக்ஷன் அவ்ளோதானா வெங்கட் பிரபு...?

மறுபடியும் நடிப்பிலிருந்து.... அப்போ டைரக்ஷன் அவ்ளோதானா வெங்கட் பிரபு...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு, சென்னை 28 -2 என படங்களை இயக்கியிருந்தாலும், ஒரு நடிகராக அறிமுகமானவர்தான் வெங்கட் பிரபு.

இவற்றில் அவர் இயக்கிய மாசு படம் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. ஆனால் சென்னை 28 - 2-ல் விட்டதைப் பிடித்துவிட்டார். ஆனால் தன் இயக்கத்தில் அடுத்து என்ன படம் என்பதை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.

Venkat Prabhu plays cop role in Kalavu

இதற்கிடையில் நடிப்பு ஆசை மீண்டும் தலை தூக்கிவிட்டது போலிருக்கிறது. களவு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வெங்கட் பிரபு.

இந்தப் படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார். "கொஞ்சம் கூட சினிமா தனம் இல்லாத ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு நடிக்கிறார். படத்துக்கு அந்தப் பாத்திரம் ரொம்ப பலமாக இருக்கும்," என்கிறார் முரளி கார்த்திக்.

ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன் போன்ற படங்களில் நடித்துள்ள வெங்கட் பிரபு, இயக்குநரான பிறகு நடிக்கும் முதல் படம் இது.

English summary
Director Venkat Prabhu is playing a cop role in Kalavu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil