தேங்க்யூ தலைவா.. ‘கோட்’ படத்தை வாழ்த்திய ரஜினிகாந்த்.. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த வெங்கட் பிரபு!

சென்னை: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து வாழ்த்தியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

rajinikanth vijay goat

மேலும், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் ஷேரை கோட் திரைப்படம் பெற்ற நிலையில், விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பங்கேற்கவில்லை.

தொடர்ந்து வெற்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பல தியேட்டர்களையும் சினிமா துறையையும் வாழ வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மற்றும் விஜய் நடித்த லியோ என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்த இரண்டு படங்களும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து தலா 600 கோடி வசூலை தமிழ் சினிமாவில் சாத்தியம் ஆக்கின. இந்த ஆண்டும் அதே போல விஜய்யின் கோட் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி உள்ளன.

ரஜினிகாந்த் வாழ்த்து: வேட்டையன் திரைப்படத்தை முதல் நாளில் நடிகர் விஜய் தேவி தியேட்டருக்கு சென்று பார்த்ததாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், கோட் படத்தை பார்த்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் வெங்கட் பிரபுக்கு போன் செய்து பாராட்டியதாக வெங்கட் பிரபு ட்வீட் போட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படுமோசமான சண்டையை போட்டு வரும் சூழலில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வருவதை அவர்களது ரசிகர்கள் உணர்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

rajinikanth vijay goat

வெங்கட் பிரபுவுடன் இணையும் ரஜினிகாந்த்?: லியோ படத்தின் வெற்றியை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜ் உடன் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ள நிலையில், கோட் படத்தை பார்த்துள்ள நிலையில் வெங்கட் பிரபுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை முடித்த பின்னர் ரஜினிகாந்த் எந்த இயக்குநர் இயக்கத்தில் இணைவார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X