விஜய்யை சி.எம் என அன்றே கணித்த வெங்கட் பிரபு.. குருட்டுத்தனம்னு சொன்னாராம்.. VP சொன்ன சீக்ரெட்

சென்னை: விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து பலரது பார்வையும் இயக்குநர் வெங்கட் பிரபு பக்கம் திரும்பியது. ஏனெனில் அவர் இயக்கிய கோட் படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை TN 07 CM 2026 என்று வைத்தவர். அன்றே கணித்தார் வெங்கட் என்று ஏராளமானோர் போஸ்ட்டுகளை போட; அதனையை ஃப்ரேம் செய்து முதலமைச்சர் விஜய்க்கு நேற்று பரிசாகவும் கொடுத்துவிட்டார் VP. அதுதொடர்பான புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை இன்னுமும் நம்ப முடியாமல் சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக ஸ்க்ரீனில் ஒரு நடிகராக பார்த்து வந்த விஜய்; இப்போது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கலாம். இருப்பினும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்தான் முதலமைச்சர் என்பது உறுதியாகியிருக்கிறது. அவரும் பதவியேற்றதிலிருந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஏகப்பட்ட சந்திப்புகள், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை என சுழல தொடங்கியிருக்கிறார்.

Venkat Prabhu Reveals Vijay Knew Nothing About Viral TN 07 CM 2026 Number Plate
Photo Credit:

ரசிகர்கள் உற்சாக மகிழ்ச்சி: கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே தேர்தலை சந்தித்து சி.எம்மாக வந்திருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் எல்லோருமே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இனிமேல் தமிழ்நாட்டில் அடுத்த 50 வருடங்களுக்கு விஜய்யின் ஆட்சிதான் நடக்கும் என்பது அவர்களது கணிப்பு. விஜய்யும் அதற்கு தகுந்தபடி உழைக்க தொடங்கியிருப்பதாகவும் கோட்டைக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

Also Read
ரவி எங்கள் வீட்டு மாப்பிள்ளை.. எல்லா பெண்களும் ஏங்குவாங்க.. குஷ்பூ இப்படி சொல்லிருக்காரே ப்பா
ரவி எங்கள் வீட்டு மாப்பிள்ளை.. எல்லா பெண்களும் ஏங்குவாங்க.. குஷ்பூ இப்படி சொல்லிருக்காரே ப்பா

வெங்கட் பிரபு சந்திப்பு: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நாசர, கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். கமல் - விஜய் சந்திப்பும் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதனையடுத்து விஜய்யை வைத்து GOAT திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவும் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார். அப்போது TN 07 CM 2026 என்ற நம்பர் பிளேட்டையும் சூப்பராக ஃப்ரேம் செய்து; அதனை நினைவு பரிசாக வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்தன.

வெங்கட் பிரபு பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின்போது வெங்கட் பிரபு சிவாவுக்கு ஃபோன் செய்ய; இவரோ அதை ஸ்பீக்கரில் போட்டார். அப்போது கோட் படத்தில் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் விஷயம் குறித்து, "நான் அப்படி நம்பர் பிளேட் வைத்தது முதலில் விஜய் சாருக்கே தெரியாது. அவர் முதலில் அதை பார்த்துவிட்டு, டேய் என ஆச்சரியப்பட்டுவிட்டு; என்னமோ உன் குருட்டுத்தனத்தில் ஏதோ செய்ற" என்று மட்டும்தான் சொன்னார்.

எனக்கு வந்த ஃபோன்கள்: விஜய் வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மாறிய பிறகு எல்லோரும் எனக்கு ஃபோன் செய்து எப்படி சரியாக கணித்தீர்கள் என கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சி.எம் ஆனது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி" என தெரிவித்தார். முன்னதாக சில வருடங்கள் முன்பு வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் கோட் திரைப்படம் வந்தது. அதில் விஜய் பயன்படுத்திய காரின் நம்பர் பிளேட்டை TN 07 CM 2026 என இருக்கும்படி வைத்தார் இயக்குநர். அது அப்போதே பெரிய பேசுபொருளானது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X