லோகேஷ் கனகராஜை கலாய்த்தாரா வெங்கட் பிரபு?.. ஆரம்பித்த புது பஞ்சாயத்து
சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் லோகி. இந்தச் சூழலில் நேற்று நடைபெற்ற கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் வெங்கட் பிரபு பேசிய விஷயம் புது பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.
முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.
எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார்.
கலாய்த்த வெங்கட் பிரபு: சூழல் இப்படி இருக்க கோட் படத்தை இயக்கியிருக்கும் வெங்கட் பிரபு அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது. இது எந்த யுனிவர்ஸும் இல்லை. தனியான படம்தான். அந்தப் படத்தை பார்த்துவிட்டு வாருங்கள் என்றெல்லாம் சொல்லமாட்டேன் என தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மீது வெங்கட் பிரபுவுக்கு என்ன காண்டுனு தெரியலையே இப்படி ஓபனாக கலாய்த்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஏனெனில் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்துக்கு வாருங்கள் என்று லோகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











