சென்சார் பயம் இல்லை.. ‘நினைத்ததை’ காட்சிகளாக்கிய வெங்கட் பிரபு

வெங்கட்பிரபுவின் முதல் குறும்படம் செல்போன் ஆப் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

சென்சார் பயம் இல்லை...நினைத்ததை காட்சிகளாக்கிய வெங்கட் பிரபு- வீடியோ

சென்னை: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் குறும்படமான 'மாஷா அல்லாஹ் கணேஷா' செல்போன் ஆப் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளித்திரை, சின்னத்திரைகளுக்கு போட்டியாக குறுந்திரையாக செல்போனிலேயே சினிமா மற்றும் சீரியல்களை பார்க்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இனி இதில் தான் எதிர்காலம் அதிகம் என்பதால், நாள்தோறும் இதில் புதிய ஆப்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் நேற்று வியு என்ற புதிய ஆப் தொடங்கப்பட்டது. இதில், 'டோர் எண் 403', 'கல்யாணமும் கடந்து போகும்',' நிலா நிலா ஓடி வா' ஆகிய தொடர்களும், நடிகர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாஷா அல்லாஹ் கணேஷா' என்ற குறும்படமும் ரிலீஸ் செய்யப்பட்டது.

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த வெங்கட்பிரபுவின் முதல் குறும்படம் இது ஆகும்.

அப்படியே தலைகீழ்:

அப்படியே தலைகீழ்:

இது குறித்து விழாவில் அவர் பேசுகையில், "வழக்கமா எல்லாரும் ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டுதான் தமிழ் சினிமாவுக்கு வருவாங்க. நான் படங்கள் எடுத்துட்டு ஷார்ட்ஃபிலிம் எடுத்திருக்கேன். இது என்னோட முதல் ஷார்ட் ஃபிலிம்.

பாம்பே கலவரம்:

பாம்பே கலவரம்:

பாம்பே தாராவியில் இந்து-முஸ்லிம் கலவரத்தை சம்பந்தப்படுத்தின கதை இது. என்.டி.குமார் எழுதுன கதையுல நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சிருக்கோம். இப்படத்தின் வசனங்களை விஜி எழுதியிருக்கிறார். பிரவின் கே.எல் படத்தொகுப்புல, பிரேம்ஜி இசையமிச்சிருக்காரு.

சென்சார் பிரச்சினை இல்லை:

சென்சார் பிரச்சினை இல்லை:

இது போன்ற பிளாட்பார்ம்கள் மூலம், சென்சார் பிரச்சினை இல்லை. இதனால் நாங்கள் சொல்ல வரும் விஷயங்களை அப்படியே ஆடியன்ஸுக்கு சொல்ல முடிகிறது. இதே படத்தை முழு நீளத் திரைப்படமாக எடுத்து, சென்சாருக்கு சென்றால் நிச்சயம் படம் ரிலீசாக வாய்ப்பே இல்லை. இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் பல இளம் திறமையாளர்களுக்கு புதிய வாசலைத் திறந்து வைக்கிறது" என்றார்.

பார்ட்டி:

பார்ட்டி:

வெங்கட்பிரபு தற்போது பார்ட்டி பட ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சிம்புவை நாயகனாக்கி மாநாடு என்ற புதிய படத்தை இயக்குறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் இக்குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X