ஹேப்பி பர்த் டே குக்கூ...வைரலாகும் வெங்கட் பிரபு மகள் பிறந்தநாள் ஃபோட்டோ

சென்னை : இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பலமுகங்களைக் கொண்ட கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. இவர் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்துள்ளார்.

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு. தற்போது டாப் கமெர்ஷியல் பட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தையும் தற்போது இவர் தான் இயக்கி வருகிறார்.

முதல் வெப் சீரிஸ்

முதல் வெப் சீரிஸ்

சமீபத்தில் இவர் இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ், ஓடிடி.,யில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. காஜல் அகர்வால் நடித்த த்ரில்லர், ஹாரர் கதையான இது, வெங்கட் பிரபு இயக்கிய முதல் வெப் சீரிசாகும்.

5 வயதிலேயே பிரபலமான மகள்

5 வயதிலேயே பிரபலமான மகள்

வெங்கட் பிரபுவிற்கு 2001 ம் ஆண்டு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஷிவானி, 5 வயதிலேயே மியூசிக் ஆல்பம் ஒன்றில் பாடி பிரபலமானவர். இரண்டாவது மகள் விக்ருதி.

ஹேப்பி பர்த்டே குக்கூ

ஹேப்பி பர்த்டே குக்கூ

தற்போது விக்ருதியின் பிறந்தநாள் கொண்டாட ஃபோட்டோக்களை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கேக்கில் ஹேப்பி பர்த்டே குக்கூ என எழுதப்பட்டுள்ளது. இந்த கேக்கை பரிசாக தந்தது ஷிவானி எனவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோ

வைரலாகும் ஃபோட்டோ

அந்த கேக் அருகில் ஆச்சரியம், சந்தோஷம் கலந்த முகத்துடன் விக்ருதி இருக்கும் ஃபோட்டோவை தான் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

எனது குட்டி இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற கேப்ஷனுடன் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள இந்த ஃபோட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வெங்கட் பிரபுவின் நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் விக்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X