வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் படம் அந்த ஜானரா?.. விஜய்யின் GOATக்கு சொன்ன அதே சங்கதி..என்ன ஆகுமோ?

சென்னை: விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. ரிலீஸுக்கு முன்னதாக படம் பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால் ரசிகர்களுக்கு படம் திருப்தியை தரவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில்; வெங்கட் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து இயக்கிய அவர்; அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வெங்கட்டின் கரியர் ஒரே படத்தில் ஓஹோவென்று மாறியது. மங்காத்தா கொடுத்த வெற்றி; பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் சூர்யாவை வைத்து இயக்கிய மாஸ் படம் தோல்வியடைந்தது.

விஜய்யுடன் கோட்: அஜித்துடன் இணைந்து மெகா ஹிட் கொடுத்த வெங்கட் எப்போது விஜய்யுடன் இணைவார் என்று தளபதி ரசிகர்கள் காத்திருந்தார்கள். அது கடந்த வருடம் நடந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த கோட் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் மீது எக்கச்சக்க ஹைப் எகிறியிருந்தது.

Venkat Prabhu s Future Is Here Post Sparks Time Travel Rumours for Sivakarthikeyan Film
Photo Credit:

என்ன ஹைப்?: அதாவது இந்தப் படம் விஜய்யின் கரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று தகவல்களை கசியவிட்டார்கள். அதுமட்டுமின்றி டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என்றும் கிளப்பிவிடப்பட்டது. இப்படி பல விஷயங்களை தங்களது எண்ணத்தில் ஏற்றிக்கொண்டு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. அரத பழசான தந்தை - மகன் மோதல் கதையை பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்திருந்தார் இயக்குநர்.

எஸ்கேவுடன் படம்: கோட் படத்தின் தோல்வி கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். எனவே அடுத்த படத்தில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே இந்தக் கூட்டணியில் படம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்போது விஜய்யின் கோட் பட வாய்ப்பு வந்ததால் அங்கு சென்றார் இயக்குநர். இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது.

படம் அந்த ஜானரா?: இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் ஸ்டோரி ஒன்று இந்தப் படம் பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது சிவகார்த்தியேன் நிற்கும் படத்தில் The Future is Here என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்களோ ஒருவேளை வெங்கட் பிரபுவு, எஸ்கேவும் இணையும் படம் டைம் ட்ராவல் ஜானராக இருக்குமோ என கேள்வி எழுப்பி; கோட் படத்துக்கும் இப்படித்தான் சொன்னார்கள்; ரிசல்ட் என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதே மாதிரி இதற்கும் ஆகிவிடக்கூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X