முடிஞ்சது சிம்புவின் 'மாநாடு' சூட்டிங்...வேற லெவல் என பாராட்டிய கல்யாணி
சென்னை : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சிம்பு நடித்துள்ள 'மாநாடு'. பல காரணங்களினால் தள்ளிப் போன 'மாநாடு' சூட்டிங் பணிகள் முடிந்து விட்டதாக படத்தின் டைரக்டர் வெங்கட் பிரபு தனது மைக்ரோ பிளாக்களில் ஃபோட்டோவுடன் அறிவித்துள்ளார்.
அதில் அவர், "'மாநாடு' சூட்டிங் முடிந்து விட்டது. படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. குழுவினர் அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ளார், படத்தின் நாயகியான கல்யாணி பிரியதர்ஷன்.

அத்துடன், "14 நாள் சூட்டிங்கை 7 நாட்களில் முடித்துள்ளீர்கள். வேற லெவல் சார் உங்க டீம்" என குறிப்பிட்டுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இவர்கள் தவிர பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











