மன்மத லீலைக்கு ஏ சான்றிதழ்... என்ன மாதிரியான படம் இது... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை : சிம்புவின் மாநாடு என்ற வெற்றிப் படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மன்மத லீலை. இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையிடப்பட உள்ள நிலையில், படத்தின் சென்சார் தற்போது நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு
மாநாடு என்ற சூப்பர் டூப்பர் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு சிறப்பான முயற்சியாக இந்தப் படம் வெளியானது.

வசூல்ரீதியான வெற்றி
படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றிப் பெற்றது மட்டுமின்றி படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் எல்லாருக்கும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அனைவருமே தற்போது மிகவும் பிசியாக அவரவர் பணிகளில் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளனர். வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு இந்தப் படம் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.

மன்மத லீலை படம்
இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு மன்மத லீலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே என மூன்று கதாநாயகிகள் காணப்படுகின்றனர். படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரேம்ஜி இசையும் அமைத்துள்ளார்.

இளம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எந்தவிதமான காட்சிகளும் இல்லாமல் அசோக் செல்வன் மற்றும் ரியா சுமனுக்கிடையிலான லிப் லாக் காட்சியை மட்டுமே இதில் காண முடிந்தது. இதையடுத்து இளம் ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏ சான்றிதழ்
இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளது. படத்திற்கு எதிர்பார்த்தது போலவே ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. தனது முந்தைய படங்களில் டீசண்டான காதலை வெளிப்படுத்திய வெங்கட் பிரபு இந்தப் படத்தில் திருமணத்திற்கு பிந்தைய காதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பாக்கியராஜின் சின்னவீடு படத்தையொட்டி மன்மத லீலை படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











