ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ள வெங்கட்பிரபுவின் படம்... அடுத்த அப்டேட்க்கு ரெடியா?
சென்னை :சிம்பு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மாநாடு படத்தை இயக்கி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள வெங்கட் பிரபு, தற்போது மன்மத லீலை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் குறித்து தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது மாநாடு. இந்தப் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்தது. படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

மன்மத லீலை படம்
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டவர்களை கொண்டு தனது அடுத்த படமான மன்மத லீலை படத்தின் வேலைகளை துவங்கிய வெங்கட் பிரபு, படத்தின் சூட்டிங்கையும் முடித்து விட்டார்.

ஏப்ரல் 1ல் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கல்யாணத்திற்கு பின்பான காதலை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். படம் சின்ன வீடு படத்தின் நவீன வடிவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய கிளிம்ப்ஸ்
படத்தில் காமெடி தூக்கலாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில் நாயகன் சிக்குவாரா மாட்டாரா என்ற த்ரில்லரும் படத்தில் நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

21ம் தேதி ட்ரெயிலர் ரிலீஸ்
அதில் முத்தக்காட்சி மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் படத்திற்கு தற்போது ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ள நிலையில் விரைவில் பாடல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











