மன்மத லீலை குடும்பப் படம் என்றாரே வெங்கட் பிரபு?..ஸ்னீக் பீக்கே இப்படின்னா?..என்ன சொல்ல வருகிறார்கள்
சென்னை : மன்மத லீலை திரைப்படத்தின் ஸ்னீக் பீக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு அசோக் செல்வன் நடிப்பில் மன்மத லீலை படத்தினை இயக்கி முடித்துள்ளார். இது வெங்கட் பிரபுவின்10வது திரைப்படமாகும். படம் அனைவரும் பார்க்கும் குடும்பப்படம் என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனால் ஸ்னீக் பீக் வேறு மாதிரி உள்ளதே, என்ன சொல்ல வருகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு அசோக் செல்வன் நடிப்பில் மன்மத லீலை படத்தினை இயக்கி முடித்துள்ளார். இது வெங்கட் பிரபுவின் 10வது திரைப்படமாகும்.
இப்படத்தை ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார்.

மன்மத லீலை
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3 ஹீரோயின்களுடன் அசோக் செல்வன்
கடந்த மாதம் மன்மத லீலை திரைப்படம் கிளிம்ப்ஸ் வீடியோவை சிம்பு வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் படத்தின் பெயருக்கு ஏற்றமாதிரி ஏகப்பட்ட முத்தக்காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து, கடந்த வாரம் இப்படத்தின் டிரைலரைப் படக்குழு வெளியிட்டது. அந்த டிரைலரில் அசோக் செல்வன் 3 ஹீரோயின்களுடனும் சும்மா புகுந்துவிளையாடுகிறார்.

ஸ்னீக் பீக்
இந்நிலையில்,மன்மத லீலை திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது. அதில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அசோக் செல்வனோடு தனிமையில் சம்யுக்தா இருக்கையில் திடீரென்று, வீட்டிற்கு அப்பா வர, எங்கு ஒளிந்து கொள்வது என்று தெரியாமல், கடைசியில் பீரோவில் ஒளிந்து கொள்கிறார் அசோக் செல்வன். இந்த ஸ்னீக் பீக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

A சான்றிதழ்
இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் வழங்கி உள்ளதால், இந்த திரைப்படத்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்க முடியும் இத்திரைப்படம் ஏப்ரல் 1ந் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











