முத்தக்காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மன்மத லீலை... ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : நடிகர் அசோக் செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மன்மத லீலை.

மாநாடு வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை வெளியாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது மாநாடு. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை இயக்கியுள்ள இவர் முதல்முறையாக டைம் லூப்பை மையமாக வைத்து மாநாடு படத்தை கொடுத்திருந்தார்.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

இந்தப் படம் அவருக்கு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. படம் திரையரங்குகளில் அதிரி புதிரி வெற்றியை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது. தொடர்ந்து 80 நாட்களை தாண்டி ஓடி வருகிறது.

மன்மத லீலை படம்

மன்மத லீலை படம்

இந்தப் படத்தையடுத்து தற்போது அசோக் செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மன்மத லீலை படத்தை எடுத்து முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அசோக் செல்வன் மற்றும் நாயகிகளில் ஒருவரான ரியா சுமன் நடித்திருந்த முத்தக்காட்சி மட்டுமே இதில் இடம்பெற்றது.

முத்த முன்னோட்டம்

முத்த முன்னோட்டம்

இதுவரை தமிழில் வெளியான படங்களின் முன்னோட்டங்களில் இத்தகைய வீடியோ வெளியாகாத நிலையில், மன்மத லீலை படத்தின் இந்த முன்னோட்டம் நெகட்டிவ் விளம்பரத்தை படத்திற்கு கொடுத்துள்ளது. யூடியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் இல்லை என்பதை இந்த முன்னோட்டம் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

கல்யாணத்திற்கு பிந்தைய காதல்

கல்யாணத்திற்கு பிந்தைய காதல்

ரசிகர்களுக்கு வித்தியாசமான படங்களை கொடுத்துவரும் வெங்கட்பிரபுவின் இந்த முன்னோட்ட வீடியோ இளைய தலைமுறையினரின் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக சின்ன வீடு படத்தை மையமாக கொண்டு மன்மத லீலை படம் உருவாகியுள்ளதாகவும் கல்யாணத்திற்கு பிந்தைய காதலை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

நெகட்டிவ் விளம்பரம்

நெகட்டிவ் விளம்பரம்

இத்தகைய அதிகப்படியான விளம்பரங்கள் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மன்மத லீலை படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக மிர்ச்சி சிவாவின் இடியட் படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X