அஜித்தின் 50 வது பிறந்தநாளில் ரீ ரிலீசாகும் 50 வது படம்...வெங்கட் பிரபுவின் வித்தியாசமான ஆசை
சென்னை : அஜித் நடித்த பிளாக்பஸ்டர் படம் மங்காத்தா. அஜித்தின் 50 வது படம் என்பதாலும், இதில் அஜித்தின் அசத்தலான நடிப்பையும் அவரது ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடினர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
Recommended Video
இந்த ஆண்டு அஜித் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளதால், ஏப்ரல் 30 ம் தேதிக்கு முன் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்ய உதவும் படி தயாநிதி அழகிரியிடம் வெங்கட் பிரபு கேட்டுள்ளார்.

ட்விட்டர் மூலம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ள வெங்கட் பிரபு, சார் தயாநிதி அழகிரி வர மே 1 தல 50. சோ நம்ம தல 50 யான மங்காத்தாவ உங்க இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி ஏப்ரல் 30 ரீ ரிலிஸ் பண்ணா ஃபேன்ஸ் நாங்க உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருப்போம். பாத்து செய்யுங்க. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் நடித்த ஹிட் படமான பில்லா சமீபத்தில் தியேட்டரில் ரீ ரிலீஸ் சொய்யப்பட்டது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவை சன் பிரிக்சர்ஸ் தயாரித்திருந்தது.


Click it and Unblock the Notifications











