பேய்க்கு எதுக்குப்பா பிளாஷ்பேக்...ரசிகர்களை யோசிக்க வைத்த வெங்கட் பிரபு
சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு, சமீபத்தில் வெப் தளத்தில் களமிறங்கி, தனது முதல் படைப்பாக, லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிசை இயக்கினார். திகில் நிறைந்த இந்த டெலி சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

காஜல் அகர்வால், வைபவ், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திகில் தொடர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று, வெங்கட் பிரபு ரசிகர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர்களிடம் அவரும், சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்பினார்.
இது பற்றி அவர் பதிவிட்ட ட்வீட்டில், உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும். அனபெல்லா இதுல எல்லாம் பேய்க்கு பிளாஷ்பேக் வைக்கலைனாலும் ஒத்துக்கிறீங்களே. அனைத்து விமர்சகர்களே இந்த கேள்விக்கு என்ன பதில். பழிவாங்குறது இதுல பிளாஷ்பேக் எதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறீங்க என கேட்டுள்ளார்.
ஆங்கில படங்களில் பேய்க்கு பிளாஷ்பேக் இல்லைனா கேள்வி கேட்க மாட்டேங்குறீங்க. ஏன் தமிழ் படங்களில் பிளாஷ்பேக் இல்லாம பழிவாங்கினா ஏத்துக்க மாட்டேங்குறீங்க என வெங்கட் பிரபு கேள்வி எழுப்பி உள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த நியாயமான கேள்விக்கு நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











