GOATல சொன்னது நடந்துடுச்சு.. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தென் இந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமன் தனது மகனுடன் சேர்ந்து சென்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பல திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கட்பிரபு விஜய்யை சந்தித்து அளித்திருக்கும் பரிசு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வெங்கட் பிரபுவின் பரிசு: வெங்கட் பிரபு இயக்கிய The Greatest of All Time (GOAT) திரைப்படத்தில் ஒரு காட்சியில், காரின் பதிவு எண் TN07 CM 2026 என இருந்தது. கோட் படம் வெளியான போது, அந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் "CM" மற்றும் "2026" என்ற எண்கள், 2026ஆம் ஆண்டு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று அப்போதே டிரெண்டாக்கினார்கள். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியான போது, கோட் படத்தில் வந்தது போலவே, தளபதி விஜய் சொல்லி அடித்துவிட்டார் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களும் இணையத்தில் கோட் பட காட்சியை இணையத்தில் டிரெண்டாக்கி வந்தனர்.

TN07 CM 2026: இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து TN07CM2026 என பொறிக்கப்பட்டிருந்த ஒரு பரிசை கொடுத்துள்ளார். இந்த போட்டோவை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வரலாறு படைக்கப்பட்டது. ஒரு சிந்தனையிலிருந்து... ஒரு தொலைநோக்குப் பார்வையாய்... இந்தத் தருணம் வரை. நமது மதிப்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களை இன்று சந்தித்து, GOAT-இன் முதல் வடிவத்தை அவரிடம் சமர்ப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி. இது வெறும் தொடக்கம் மட்டுமே என பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் வித்தியாசமான பரிசுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதே போல நடிகர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த் இருவரும் சேர்ந்து முதல்வர் விஜய்யை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications