காஜல் நடிப்பில் ஒரு கலக்கல் காதல் கதை... லவ்வர்ஸ் டே-யில் வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸ் ரிலீஸ்
சென்னை: காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸ் காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் என எல்லோரும் வெப் சீரிஸ் பக்கம் கவனம் திருப்பி வருகின்றனர்.
முன்னணி நடிகைகளான, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பெரும்பாலான நடிகைகள் இதில் நடித்துவருகின்றனர்.

இயக்குனர்கள்
ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் உட்பட சில நிறுவனங்கள் இதைத் தயாரித்து வருகின்றன. ஏற்கனவே, இந்தியில் வெப் தொடர்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இங்கும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வெப்சீரிஸை இயக்க இயக்க இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெங்கட் பிரபு
இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதவ் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உட்பட பலர் வெப் தொடர்களை இயக்குகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார். இவர், சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்க உள்ளார்.

கயல் ஆனந்தி
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு முன்பாக, வெப் சீரிஸ் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். இதில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மற்றும் நடிகை கயல் ஆனந்தி, நடிகர் வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி
மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட இது ரொமான்டிக் காமெடி கதையை கொண்ட தொடர்.
ஹாட் ஸ்டார் நிறுவனத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடர், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











