'மங்காத்தா'வில் அந்த ரோலில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. வெங்கட்பிரபு சொன்ன சுவாரசியத் தகவல்!

சென்னை: அஜித் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50வது படமான இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து அஜித்தின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படமாக மாறியது. இப்படம் குறித்து பேசி உள்ள வெங்கட்பிரபு இப்படத்தில் அர்ஜுன் கேரக்டரில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த வெங்கட் பிரபு, சரோஜா, கோவா படத்தை இயக்கிய பின் அஜித்துடன் மங்காத்தா படத்தை இயக்கினார். இதில் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் அப்போது பெரிதும் பேசப்பட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப் படமாக உள்ளது.

Mankatha Vijay Ajith Venkat Prabhu

விஜய்யே கேட்டார்: இப்படத்தை சன் பிக்சர்ஸ் எந்த ஒரு விளம்பரமும், போஸ்டரும் இல்லாமல் 2011 ஆகஸ்ட் 31ஆம் தேதி எந்த ஒரு பண்டிகையும் இல்லாத போது இரவோடு இரவாக வெளியிட்டது. ஆனால், அந்த படத்தை அஜித்தின் ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி மகிழ்ந்தனர். படம் திரையிட்ட அத்தனை காட்சிகளிலும் வசூல் சாதனை புரிந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இன்று வரை அஜித்தின் மங்காத்தா தீம் மியூசிக்கையும், பின்னணி இசையையும் அடித்துக் கொள்ள முடியவில்லை. யுவன் திரும்ப நினைத்தால் கூட இது போல ஒரு மியூசிக் போட முடியாது என்ற அளவுக்கு இசை தரமான இருந்தது.

இப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு, மங்காத்தா படத்தில் அர்ஜுன்சார் கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால், அவரை எப்படி அணுகுவது, எப்படி கேட்பது, கேட்டாலும் ஒத்துக்கொள்வாரா என்ற தயக்கம் இருந்ததால் அந்த எண்ணத்தை மறந்துவிட்டேன். பின் மங்காத்தா படம் வெளியாகி வெற்றி பெற்ற போது, விஜய்யே என்னை அழைத்து, அர்ஜுன் கதாபாத்திரத்தை என்கிட்ட கொடுத்து இருக்கலாமேடா, அஜித்தின் 50வது படத்தில் நானும் இருந்து இருப்பேனே என்று கேட்டார் என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

விஜய்யின் கோட்: தற்போது வெங்கட்பிரபு தளபதி விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டுவிதமான வேடத்தில் விஜய் நடித்துள்ளார். மகன் விஜய்யை மிகவும் இளம் வயதாக காட்டுவதற்காக ஹாலிவுட் சென்று டீஏஜிங் என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு. இதற்காகத்தான் விஜய் சமீபத்தில் வெங்கட்பிரபுவுடன் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பினார்.

தாமதமாகுமா: கோட் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்காவில் நடக்கும் டீ ஏஜிங் பணிகள் ஆகஸ்ட் 10ம் தேதி தான் முடியும் என்றும், பின் எடிட்டிங், பின்னணி இசை, டப்பிங் என பல பணிகள் இருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி என பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X