GOAT: சொக்கத்தங்கம்ங்க அஜித்.. கோட் ட்ரைலர் பார்த்தபின் வெங்கட் பிரபுவிடம் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் 68வது படமான தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று அதாவது, ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது. ட்ரைலரில் டீ - ஏஜிங் செய்யப்பட்ட விஜய், சி.எஸ்.கே மேட்ச், உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ட்ரைலரைப் பார்த்த அஜித் வெங்கட் பிரபுவுக்கு மெசேஜ் செய்துள்ளார். அதில் அவர் என்ன கூறினார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் விஜய் நடிப்பினைப் பார்த்து மிரண்டுபோயுள்ளனர். டீ- ஏஜிங் செய்யப்பட்ட விஜய் குறித்து ஸ்பார்க் பாடலில் விமர்சனம் செய்தவர்கள் ட்ரைலரில் வருவதைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். ட்ரைலரின் இறுதியில், விஜய் நடித்து வெளியான கில்லி படத்தில் விஜய் பாடும் மருதமலை மாமணியே முருகய்யா பாடலைப் பாடுவதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

கோட் படத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தி கோட் படம் குறித்து அஜித் கேள்விப்பட்ட பின்னர், வெங்கட் பிரபுவிடம், தனது 50வது படமான மங்காத்தா படத்தை விடவும் 100 மடங்கு சிறப்பாக இருக்கவேண்டும் எனவும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கவேண்டும் எனவும் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபுவே சமீபத்தியபேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

100 மங்காத்தா: கோட் ட்ரைலரில் அஜித் படத்தில் படத்தில் இருந்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மங்காத்தா படத்தில் இடம் பெற்றுள்ள அஜித் பேசும் வசனமான, சத்தியமா இனிமேல் குடிக்கவே மாட்டேன் எனும் டையலாக்கை அஜித் ரசிகர்களுமே கொண்டாடி வருகின்றனர்.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

அதேபோல் ஆரம்பம் படத்தில் ஒரு காட்சியில் அஜித் லிஃப்ட்டுக்குள் இருந்து வெளியே வருவார். அந்த காட்சிக்கு திரையரங்கமே அதிரும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா பி.ஜி.எம் போட்டு இருப்பார். அதேபோல் ஒரு காட்சி ட்ரைலரிலும் இடம் பெற்றுள்ளது. மேலும் மங்காத்தா படத்தில் அஜித்திற்கு எப்படி சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொடுக்கப்பட்டதோ, அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொடுக்கப்பட்டுள்ளது.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

அஜித் கமெண்ட்: ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், அஜித் தி கோட் படத்தின் ட்ரைலரைப் பார்த்தாரா? பார்த்த பின்னர் என்ன கூறினார் எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "அஜித் சார் ட்ரைலர் பார்த்துட்டாரு.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

ட்ரைலர் பார்த்த பின்னர் எனக்கு மெசேஜ் பண்ணாரு. அதில், ட்ரைலர் நல்லா இருக்குடா, விஜய்க்கும் டீம்க்கு வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லீடு" என குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

GOAT GOAT Trailer Vijay Ajithkumar

ஏற்கனவே அஜித் ரசிகர்களும் கோட் ட்ரைலரை கொண்டாடி வரும் நிலையில், கோட் ட்ரைலர் குறித்து அஜித்தின் கமெண்ட் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X