செப்டம்பர் 5 செய்றோம்.. படத்துக்கு ஹைப் இல்லையா?.. இப்போ டிக்கெட்டே இல்லை.. வெங்கட் பிரபு சரவெடி!
ஹைதராபாத்: ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாகவும் தளபதி விஜய்யின் 68வது படமாகவும் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
மாரி செல்வராஜின் வாழை, நானி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சூர்யாவின் சாட்டர்டே உள்ளிட்ட படங்கள் இப்போது வரை தியேட்டர்களில் ஓடினாலும், வியாழக்கிழமை அன்று ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அந்த படங்கள் ஓடும் என தெரிகிறது.

கோட் படத்தின் டிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான டிமாண்ட் காரணமாக தியேட்டர்கள் காட்சிகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என எதுவும் சென்னையில் இதுவரை நடைபெறாத நிலையில், நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்டு வெங்கட் பிரபு பேசியது டிரெண்டாகி வருகிறது.
கோட் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: கடந்த வாரம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கோட் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி கூட கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கோட் படத்திற்கு எந்தவொரு ஹைப்பும் இல்லை என ஹேட்டர்கள் கலாய்த்தனர். ஆனால், டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த மாத்திரத்திலேயே சர்வர் கிராஷ் ஆகி ஹவுஸ்ஃபுல் ஆகும் நிலை உருவாகி வருகிறது. சென்னையில், ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட் ஓபன் செய்யப்பட்ட இடங்களில் ரெட் அலர்ட் தான் காண்பிக்கிறது. கோட் படத்தை ஆந்திரா ரசிகர்கள் மத்தியில் புரமோட் செய்வதற்காக நேற்று ஹைதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஏஜிஎஸ் நிறுவனம் நடத்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரசாந்த் முதல் மீனாட்சி சவுத்ரி வரை: நேற்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலர்ஃபுல்லாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு செம கான்ஃபிடன்ட்டாக பேசியிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
செப்டம்பர் 5 செய்றோம்: ஏஜிஎஸ் நிறுவனத்தில் முதன்முறையாக படம் பண்றேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு நன்றி எனக்கூறிய வெங்கட் பிரபு செப்டம்பர் 5 செய்றோம், கோட் படம் தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை என்டர்டெயின் பண்ணும். தளபதியை புதுசா பார்க்க ரெடியாகிடுங்க, படத்தை நாங்க நல்லா இருக்குதுன்னு சொல்லி புரமோட் செய்றதை விட நீங்க பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொல்றது தான் ரொம்ப முக்கியம் என்றார்.
லியோ வசூலை முந்துமா?: விஜய்யின் லியோ படத்துக்கும் இதே போன்ற டிக்கெட் டிமாண்ட் ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ், எல்சியூ ஹைப் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த படம் முதல் நாளே 146 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்தது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் முதல் நாளில் 150 கோடி வசூல் சாதனை நிகழ்த்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக 100 கோடி வசூல் சாதனையை முதல் நாளில் கோட் படம் அள்ளும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











