கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கிறது… வெங்கட் பிரபு ட்வீட்!
சென்னை : கொரோனா காலத்தில் மக்களுக்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்த செயல்படுவதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழம் அமோக வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் ஆட்சி அமைக்க உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் அவரை கூட்டணிக்கட்சித் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூகவலைத்தளங்களின் வாயிலாகவும் ஸ்டானுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகின்றன.

மகத்தான வெற்றி
ஏப்ரல் 6ந் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகள் மே 2ந் தேதி எண்ணப்பட்டன. திமுக 133 இடங்களையும், காங்கிரஸ் 18 இடங்களையும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் தலா 2 இடங்களையும் வென்றுள்ளன.

அரியணையில்
திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்த ஸ்டாலின் முதன்முறையாக தற்போது தான் அரியணையில் அமரவிருக்கிறார்.

வாழ்த்து மழை
மாபெரும் வெற்றி பெற்ற மு க ஸ்டாலினுக்கு,கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார நிபுணர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளப்பக்கத்திலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மகிழ்ச்சி அளிக்கிறது
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, எங்கள் மதிப்பிற்குரிய முதல்வர் முகஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு வாழ்த்துக்கும் அவர் பதிலளிப்பதை பாஇந்நிலையில் இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, எங்கள் மதிப்பிற்குரிய முதல்வர் முகஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒவ்வொரு வாழ்த்துக்கும் அவர் பதிலளிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை காணமுடிகிறது. இந்த நேர்மறை எப்போதும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார். ர்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை காணமுடிகிறது. இந்த நேர்மறை எப்போதும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











