நான் டைரக்ட் பண்ண படங்கள்லேயே பெரிய பட்ஜெட் படம்... மாநாடு குறித்து வெங்கட் பிரபு
சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளது மாநாடு படம்
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் தன்னுடைய கேரியரில் எப்படி பெஸ்ட்டாக அமைந்துள்ளது என்பது குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

லிரிக் வீடியோ வெளியீடு
நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன்,எஸ்ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம். இரு தினங்களுக்கு முன்பு படத்தின் சிங்கிள் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டது. அதில் சூட்டிங்கின் போது நடைபெற்ற நிகழ்வுகள் சேர்க்கப்பட்டிருந்தன.

வெங்கட் பிரபு பெருமை
இந்நிலையில் இந்த படம் தன்னுடைய கேரியரில் எப்படி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் படக்குழுவினருடன் கலந்துரையாடிய அவர் இந்த அப்டேட்டை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்தார்.

மாநாடு குறித்து வெங்கட் பிரபு
தன்னுடைய கேரியரில் தான் இதுவரை டைரக்ட் செய்த படங்களில் பெரிய பட்ஜெட் படம் மாநாடு என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தைவிட இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மாநாடு படம் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் ரிலீஸ்
மாநாடு படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் அதிகமான அம்சங்கள் படத்தில் உள்ளதால் தியேட்டரில் இந்த படத்தை பார்ப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











