பிரேம்ஜியின் மன்மத லீலை... பதிலுக்கு பதில் வம்பிழுத்த வெங்கட் பிரபு... என்னங்க ரகளை இது!
சென்னை : நடிகரும் பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது மன்மத லீலை. இந்தப் படம் அடல்ட் படமாக வெளியாகியுள்ள நிலையில் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இதையொட்டி வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் ஸ்வீட் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு
நடிகர் மற்றும் பிரபல இயக்குநராக உள்ளார் வெங்கட்பிரபு. இவரது மாநாடு படம் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. படம் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு வெளியானது. சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்தை சிறப்பான வெற்றியை நோக்கி கொண்டு சென்றது.

மாநாடு படம்
படம் மிகவும் எளிதாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. இந்நிலையில் இந்தப் படத்துடனேயே சேர்த்து கொரோனா காலத்தில் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் வெங்கட் பிரபு. நேற்றைய தினம் படம் ரிலீசாகியுள்ள நிலையில், படம் தாறுமாறு வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

மன்மத லீலை படம்
படத்தின் கிளிம்ப்ஸ், ட்ரெயிலர் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படம் பாக்கியராஜின் சின்னவீடு டைப் படம் என்றும் தன்னுடைய படத்திற்கு இளைஞர்கள் மட்டுமே வரலாம் என்றும் முன்னதாக வெங்கட்பிரபு தெரிவித்திருந்ததும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

வெங்கட்பிரபு -பிரேம்ஜி ரகளை
படத்திற்கு பிரேம்ஜியே இசையமைத்துள்ளார். படத்திற்கு அவரது இசை சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டிலும் ட்விட்டரில் பிரேம்ஜி மற்றும் வெங்கட்பிரபுவின் ரவுசை தாங்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.

ஹீரோயினுடன் நெருக்கமான வெங்கட்பிரபு
நேற்றைய தினம் வெங்கட்பிரபு முன்னதாக நடித்துள்ள படத்தில் அவர் ஹீரோயினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த பிரேம்ஜி அவரது மன்மத லீலை என்று பதிவிட்டிருந்தார். இதற்கு தலையில் அடித்துக் கொள்ளும் எமோஜியை வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.

நாயகியுடன் நெருக்கமான பிரேம்ஜி
தொடர்ந்து பிரேம்ஜி ராஜஉடையில் ஹீரோயினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார். மேலும் இந்தா வாங்கிக்க என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் ஒருபக்கம் இருவரின் கலாய்ப்புகளை வைத்து பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











