முதலமைச்சராக பதவியேற்க முடியாத சூழலில் விஜய்.. ரஜினி டயலாக்கை பகிர்ந்த வெங்கட் பிரபு
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆனால் கூட நாம் கொஞ்சம் நிதானமாக கவனிக்கலாம், ஆனால் இங்கு மணிக்கு மணி பரபரப்பாக திருப்புமுனைகளாக, ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் மே 7 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினியின் டயலாக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் இணைந்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது மட்டும் இல்லாமல் தவெக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி, விசிக, மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் உள்ளனர்.

முதலமைச்சராக விஜய்?: அதே நேரத்தில், விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இப்படி இருக்கையில், விஜய் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த சூழலில், ஆளுநர் அழைப்பு விடுக்காததால், விஜய் முதலமைச்சராக பதவியேற்பது தள்ளிப்போயுள்ளது.
வெங்கட் பிரபு: அதிமுகவில் சில எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளன. இப்படி இருக்கையில் விஜய் இன்று அதாவது மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க முடியாது என்பது உறுதி ஆகிவிட்ட நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும், அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் மற்றும் தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் பயன்படுத்திய மிகவும் முக்கியமான சொற்களைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளார், அதாவது அவரது பதிவில், " நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications