தளபதி விஜய் இடத்தை ரீப்ளேஸ் பண்ண ஒருத்தர் கிடைச்சிட்டாரே.. வெங்கட் பிரபு ட்வீட்டை பார்த்தீங்களா!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களைத் தொடர்ந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கோலிவுட்டில் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால் அடுத்த தளபதி யார் என்பதுதான்? சிவகார்த்திகேயன், கவின், அசோக் செல்வன் உள்ளிட்ட வளர்ந்துவரும் நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தாலும் அவர்களை ஓவர் டேக் செய்து விட்டு ரத்தபூமி படத்தின் ஹீரோ வந்து விடுவார் என்றே தெரிகிறது என நெட்டிசன்கள் சமீபத்தில் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ பேசிய வீடியோ ஒன்றை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Venkat Prabhu shares trending Ratha Bhoomi director and hero Next Thalapathy speech video

விஜய் ரசிகர்களே அந்த வீடியோவை போட்டு சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு அதற்கு ரியாக்ட் செய்திருப்பது ரசிகர்களை மேலும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த தளபதி இவர்தான்: கோலிவுட்டில் அடுத்த தளபதி யார் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பொருத்தவரையில் அடுத்த தளபதி இவர்தான். ஆக்சன் ஹீரோ ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இவருக்கு உள்ளது. அதனால் தான் இந்த படத்திற்கு ரத்த பூமி என டைட்டில் வைத்தேன் என ரத்த பூமி எனும் புது படத்தின் இயக்குனர் பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

ஒரு விரல்ல ரயிலை நிறுத்தணும்: படம் ஆரம்பித்ததும் ஒரு ட்ரெயின் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ரயில் தண்டவாளத்தில் ஹீரோயின் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவரை ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும் என இயக்குநர் கூறினார். அதிலும் ஒரே ஒரு விரலை நீட்டி ரயிலை நிறுத்த வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் கதை ரொம்பவே பிடித்து போய் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

அப்படி ஒரு வசனம்: மேலும், இயக்குநர் சொன்ன பஞ்ச் வசனம் ரொம்பவே பிடித்திருந்தது என அந்த வசனத்தையும் பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். " நீ என்னை கேவலமா திட்டின, பதிலுக்கு நான் உன்னை திட்டினேன்.. நீ என் குடும்பத்தை திட்டின.. பதிலுக்கு நான் உன் குடும்பத்தை தட்டினேன்.. இத்தோட நிறுத்திக்கோ.. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட உன்னால பேச முடியாது.. என்ன பொணம் எப்படிடா பேசும்.. நான் உன்னை அந்த நேரம் கொண்ணு இருப்பேன் டா" என இதுவரையில் தமிழ் சினிமாவில் வராத அளவுக்கு ஒரு பஞ்ச் வசனத்தை பேசிய வீடியோவை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு ட்வீட்: அந்த வீடியோவை பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, நமக்கு டஃப் காம்பெடிஷன் கொடுப்பான் போல தெரியுது என தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ். அமுதனையும் டேக் செய்து இருந்தார். வெங்கட் பிரபு போட்ட ட்வீட்டைப் பார்த்த அமுதன், நமக்கு கிடைத்துள்ள இடத்தை சாதாரணமா நினைக்கக் கூடாது.. உழைச்சிட்டே இருந்தாதான் இவங்களோட போட்டிப் போட முடியும் என அவரும் சீரியஸாக ட்வீட் போட்டு சிரிப்பை மூட்டியுள்ளார். இவர்களின் சேட்டையை பார்த்த விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X