என்னோடது தான் பெஸ்ட்.. அண்ணன் வெங்கட் பிரபுவிடம் போட்டிக்கு சென்ற பிரேம்ஜி.. என்ன மேட்டர் தெரியுமா?

சென்னை: வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களை கொஞ்சம் கூலாக்கலாமே என நடிகர் அஜித் மற்றும் விஜய் உடன் மங்காத்தா ஷூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ஷேர் செய்துள்ளார்.

உடனடியாக போட்டிக்கு அவரது தம்பியும் நடிகருமான வெங்கட் பிரபு இன்னொரு புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்.

குடும்பத்திற்குள்ளே இப்படியொரு போட்டியா என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

11 வருஷம் ஆகுது

11 வருஷம் ஆகுது

என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத புகைப்படம் என்றால் அது இதுதான். இந்த புகைப்படத்தை எடுத்து இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது என தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மங்காத்தா ஷூட்டிங்கின் போது

மங்காத்தா ஷூட்டிங்கின் போது

வேலாயுதம் படத்தில் நடித்து வந்த நடிகர் விஜய் நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா பட ஷூட்டிங் தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இருவருடனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் அது.

அண்ணனுக்கு போட்டியாக

அண்ணனுக்கு போட்டியாக

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி அண்ணனுக்கு போட்டியாக நடிகர் அஜித் மற்றும் விஜய் பிரேம்ஜியுடன் இணைந்து பிரேம்ஜி போலவே சூப்பர் கூலாக கை சிம்பிளை வைத்தபடி கொடுத்த கலக்கல் புகைப்படத்தை ஷேர் செய்து என்னோட புகைப்படம் தான் பெஸ்ட் என கமெண்ட் போட்டு வெங்கட் பிரபுவை கடுப்பேத்தி உள்ளார்.

நானும் இருக்கேன்

நானும் இருக்கேன்

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி போட்டோக்களை வெளியிட அதே லக்கி கிளப்பில் நானும் இருக்கேன் என இயக்குநர் மோகன் ராஜாவும் விஜய் மற்றும் அஜித் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது என்னடா முத்து படத்தில் மொட்டை மாடிக்கு வரவும் பரிசு காத்திருக்கு என்பது போல செயின் நீண்டு கொண்டே போகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். வேலாயுதம் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மங்காத்தா 2

மங்காத்தா 2

அஜித் மற்றும் விஜய்யை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்க வேண்டும் என மங்காத்தா படம் வெளியானதில் இருந்தே இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனக்கும் அந்த ஆசை இருப்பதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

மாநாடு வெற்றி

மாநாடு வெற்றி

மங்காத்தா படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் பெற்றுத் தந்துள்ளது. நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் தான் மாநாடு என்றும் தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் விஜய் மற்றும் அஜித்தை இணைத்து ஒரு சூப்பரான படத்தை வெங்கட் பிரபு இயக்குவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X