Just In
- 2 hrs ago
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- 2 hrs ago
அருண் விஜய்யின் அடுத்த மிஷனில் இணைந்த புதுமுக நடிகை.. அது என்ன மிஷன் தெரியுமா?
- 3 hrs ago
பிரபல ரஜினி பட நடிகர் நவாஸுதீன் சித்திக்கின் தங்கை 26 வயதில் திடீர் மரணம்.. சோகத்திதில் பாலிவுட்!
- 4 hrs ago
ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?
Don't Miss!
- Sports
இதுக்கு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. சொல்ல சொல்ல கேட்காமல் மாட்டிக் கொண்ட சீனியர் வீரர்!
- News
உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்!
சென்னை: படம் இயக்குவதற்காக பெற்ற ரூ. 1 கோடியை இயக்குநர் வெங்கட் பிரபு நடிகை சோனாவிடம் திருப்பி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
‘குசேலன்', ‘பத்து பத்து', ‘சோக்காலி' உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சோனா. இவர் யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் படம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு, சோனா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இதையடுத்து சோனா, வெங்கட் பிரபுவுக்கு சம்பளம் பேசி, ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சொல்லியபடி வெங்கட் பிரபு சோனாவுக்கு படம் இயக்கிக் கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை சோனா திருப்பிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெங்கட் பிரபு மீது சோனா புகார் அளித்தார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், வெங்கட் பிரபு, சோனா மற்றும் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ‘சோனாவுக்கு படம் இயக்காத வெங்கட் பிரபு, அவரிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயில், மே மாதத்துக்குள் ஒரு கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். வெங்கட் பிரபுவும் பொருத்தமான முறையில் அதை ஈடு கட்டுவதாக உறுதியளித்ததாக சொல்கிறார்கள்.
எனவே சோனா, வெங்கட்பிரபு பஞ்சாயத்து கூடிய சீக்கிரமே சமரசமாக முடியும் என்று நம்பப்படுகிறது.