Thalapathy 68: வெறும்10 நிமிஷத்துக்கு பல கோடிகளை வாரி இறைக்கும் வெங்கட் பிரபு.. லோகேஷ் ஃபார்முலாவா?
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்னொரு சூப்பரான அப்டேட்டும் கிடைத்திருக்கிறது.
இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ படங்கள் சுமார் 900 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸிலேயே வசூலை ஈட்டித் தந்துள்ளன.

இந்நிலையில், தளபதி 68 திரைப்படம் 800 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பல பிரத்யேக வேலைகளையும் டெக்னாலஜி விஷயங்களையும் வெங்கட் பிரபு செய்து வருகிறார்.
லியோ ஹைனா சீன்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் முதல் 10 நிமிட காட்சியில் இடம்பெற்ற ஹைனா சீனை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்க என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருந்தார். அந்த படத்துக்கு பிரத்யேகமாக செய்யப்பட்ட ஹைனா சிஜி தத்ரூபமாக வந்திருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த ஒரு காட்சிக்கு மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது.
10 நிமிஷத்துக்கு பல கோடி: இந்நிலையில், லியோ படத்தை போலவே தளபதி 68 படத்தில் வரும் டீ-ஏஜிங் போர்ஷனுக்காக வெங்கட் பிரபு சுமார் 6 கோடி செலவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காட்சிகள் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படத்திற்கு ரொம்பவே முக்கியமான காட்சிகள் என்பதால் அர்ச்சனா கல்பாத்தி எந்தவொரு தடையும் சொல்லாமல் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
இவானாவுக்கு பதில் இளம் நடிகை: தளபதி 68 படத்தில் இவானா நடிக்கவில்லை என்றும் இளம் நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். மேலும், சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்கு தளபதி 68 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு ஹிட் அடித்ததை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை தளபதி 68 அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











