Venkat Prabhu - நாளை தெரிந்துகொள்வார்கள் - கஸ்டடி குறித்து வெங்கட் பிரபு அதிரடி
சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) நாயட்டு படத்தின் தழுவல் கஸ்டடி படம் இல்லை என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலில் கஸ்டடி உருவாகியிருக்கிறது நாக சைதன்யாவுக்கு இது முதல் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வெங்கட் பிரபுவின் ட்ரெய்லரில் எப்போதும் ஜாலியான காட்சிகள் இருக்கும். ஆனால் கஸ்டடி ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளே இருக்கின்றன. எனவே கஸ்டடி படம் வெங்கட் பிரபுவின் புதிய முயற்சியாக முழு ஆக்ஷன் படமாக உருவாகியிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் எண்ணம் எழுந்திருக்கிறது. படமான நாளை (மே 12) ரிலீஸாகவுள்ளது.
களைகட்டும் புரோமோஷன்: படம் நாளை வெளியாகவிருப்பதால் படத்தின் புரோமஷன் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் பல பேட்டிகளை கொடுத்துவருகின்றனர். நேற்று முன் தினம் சென்னையில் கஸ்டடி ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்தும், வெங்கட் பிரபு குறித்தும் ரகளையாக பேசி சென்றனர்.
அதுதான் இன்பிரேஷன்: விழாவில் பேசிய வெங்கட் பிரபு, "கஸ்டடி அடர்த்த்யான கதையம்சம் கொண்ட திரைப்படம், மலையாள படமான நாயட்டு படத்தை பார்த்து இதுபோல் ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன். அதை நம் ஆடியன்ஸுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக மாற்றினேன்.நாயட்டுதான் கஸ்டடி படத்துக்கு உந்துதலாக இருந்தது. முழு ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. 90களில் நடக்கும் கதையைத்தான் எழுதியிருக்கிறேன். அந்த உணர்வை திரையில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இளையராஜாவின் இசையை நாடினேன் என பேசியிருந்தார்.

நாளை தெரிந்துகொள்வார்கள்: இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் நயட்டு படத்தை தழுவி கஸ்டடி படம் எடுக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டிருந்தார். அதனை ரீட்வீட் செய்திருக்கும் வெங்கட் பிரபு, " இது உண்மை இல்லை ப்ரோ.நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நாளை அனைவரும் தெரிந்துகொள்வார்கள். கண்டிப்பாக கஸ்டடி படத்தை பாருங்கள். பார்த்த பிறகு எனக்கு தெரியப்படுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











