“மாநாடு“ இவ்வளவு ரீசானதுக்கு… சிம்பு தான் காரணம்… மனம் திறந்த வெங்கட் பிரபு !
சென்னை : "மாநாடு" திரைப்படம் இந்த அளவுக்கு ரீசானதுக்கு சிம்பு தான் காரணம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
ரசிகர் ஒருவருடன் மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்து உரையாடி உள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெங்கட் பிரபு
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை
சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும், எஸ்.ஏ. சந்திர சேகர், ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பணிகள் முடிந்தன
மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் , இயக்குனர் வெங்கட்பிரபு ரசிகர் ஒருவருடன் மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிம்புதான் காரணம்
மாநாடு திரைப்படம் எங்களுடைய புது முயற்சி, தமிழ் சினிமாவுக்கே இது ஒரு புதிய முயற்சித்தான். இந்த திரைப்படம் இவ்வளவு பிரபலமாவதற்கு சிம்புதான் காரணம். வேறுயாராவது இதில் நடித்திருந்தால் இப்படத்திற்கு இவ்வளவு பெயர் வந்திருக்காது என்றார். ரசிகர்களுக்கு மாநாடு திரைப்படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











