GOAT Positive Review: வெறித்தனம்! சி.எம் நெம்பர் ப்ளேட்.. நச் கேமியோக்கள்! தமிழ்நாடே கொண்டாடும் கோட்

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் சுமார் 400 கோடி செலவில் உருவாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததை விடவும் பல கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. அதேநேரத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் படத்தினைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க அண்டை மாநிலங்களுக்குச் சென்றனர்.

கோட் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என்றாலும், படத்திற்கு சிறப்பான முறையில் புரோமோசன் மேற்கொண்டு படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுபோய் சேர்த்துள்ளது அர்ச்சனா கல்பாத்தி தலைமையிலான குழு. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். அது குறித்தும் படத்தில் உள்ள விஷயங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

goat vijay

ரசிகர் ஒருவர் கூறும்போது, மூன்று மணி நேரம் போவதே தெரியவில்லை. படத்தினை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். அப்பா மகன் செண்டிமெண்ட் இந்தப் படத்தில் உள்ளது. யாராவது படத்தினை நல்லா இல்லை எனக் கூறினால், அவற்றை நம்பவேண்டாம். படத்தில் போர் அடிக்கும் காட்சி என எதுவும் இல்லை. படத்தினை நீங்கள் சீட்டில் அமர்ந்து பார்க்க மாட்டீர்கள். ஒவ்வொரு காட்சியும் தரமாக செதுக்கியுள்ளார்.

அஜித் ரசிகை: அதேபோல் நடிகர் அஜித்தின் ரசிகை ஒருவர் கூறும்போது, நான் அஜித் ரசிகை. படம் மொத்தமாகவே நன்றாக உள்ளது. முதல் பாதி, இரண்டாம் பாதி என மொத்தமாகவே படம் சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் எனக் கூறினார். அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, படம் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக உள்ளது. படத்தினை வெங்கட் பிரபு கூறியதைப் போலவே, செதுக்கியுள்ளார் எனக் கூறினார்.

goat vijay

திரைக்கதை: இன்னொருவர் கூறும்போது, படம் வழக்கமான திரைக்கதையில் வெங்கட் பிரபு இந்தப் படத்தினை இயக்கவில்லை. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே உள்ளார். அனைத்தும் சிறப்பாக உள்ளது. தளபதிக்கு சிறப்பான ஃபேர்வெல் படத்தினை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துகள் எனக் கூறினார். நான் தீவிரமான விஜய் ரசிகர், படம் எப்படி உள்ளது என என்னிடம் கேட்காமல், தளபதி குறித்து ஒரு மாதிரியாக பேசுபவர்களிடம் இந்தப் படம் குறித்து கேட்டுப் பாருங்கள் படம் எப்படி இருக்கு எனக் கூறுவார்கள். படம் அந்த அளவிற்கு தரமாக உள்ளது.

goat vijay

நெம்பர் பிளேட்: படத்தின் இடைவேளைக் காட்சி, க்ளைமேக்ஸ் காட்சி, சிவகார்த்திகேயன், த்ரிஷா இவர்கள் படத்தில் வந்தது எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதேபோல் கார் நம்பர் ப்ளேட்டைக் காட்டும்போது எங்களால் சீட்டில் உட்கார முடியவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களுமே கொண்டாடினோம். படம் தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடி வசூல் செய்யும் முதல் படமாக இருக்கும். தளபதி திருவிழாதான் என கூறினார்.

goat vijay

கேமியோ: ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடும் அதேவேளையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு யுவன் சங்கர் ராஜாவுக்கு பிரபல விமர்சகர்களே பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்துக்கு எப்படி மங்காத்தாவோ, அதேபோல் விஜய்க்கு கோட் எனவும் பாராட்டி வருகின்றனர். படத்தில் அதிகப்படியான கேமியோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவை கதையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக அமைந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X