ரொம்ப நல்ல மனுஷன்.. இவ்வளவு சீக்கிரமா போயிட்டாரே.. ஆனந்த கண்ணன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்த செய்தி அறிந்த தமிழ் சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு முதன் முதலில் ட்வீட் போட்டு ஆனந்த கண்ணனின் மறைவு செய்தியை அறிவித்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் சேரன், நாடக கலைஞர் செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த கண்ணன் ரொம்ப நல்ல மனுஷன் என்றும் தமிழ் மீது மிகவும் பற்றுக் கொண்டவர் என்றும் பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் மறைவு

பிரபலங்கள் மறைவு

2020 முதல் 2021 முதல் பாதி வரை தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் மறைவு செய்திகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில், சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைவு மற்றும் சினிமா அப்டேட்களால் நார்மல் மோடுக்கு வந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஆனந்த கண்ணனின் மறைவு செய்தி மாறி விட்டது.

நல்ல மனுஷன்

நல்ல மனுஷன்

புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். சினிமா பிரபலங்கள் பலருடன் நல்ல நட்பு பாராட்டி வந்த அவரது மறைவு செய்தியை அறிந்த பிரபலங்கள் பலரும் ரொம்ப நல்ல மனுஷன் ஆனந்த கண்ணன் இவ்வளவு சீக்கிரம் போயிருக்கக் கூடாது என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பேட்டி

விஜய் பேட்டி

#RIPanandakannan ஹாஷ்டேக் போட்டு ஆனந்த கண்ணனின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யுடன் ஆனந்த கண்ணன் எடுத்த பேட்டி புகைப்படங்களை பதிவிட்டு ஆனந்த கண்ணனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேரன் இரங்கல்

சேரன் இரங்கல்

இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த கண்ணன் மறைவு செய்தியை பகிர்ந்து, "Such a Sweet Person" என ட்வீட் போட்டு தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். சேரன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆனந்த கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிளேடு தீனா

பிளேடு தீனா

நல்ல நண்பரும் நல்ல மனிதருமான ஆனந்த கண்ணன் இளம் வயதில் நம்மை எல்லாம் விட்டு மறைந்து விட்டார். அவரது இழப்பு நிச்சயம் பேரிழப்பு தான். அவரது பிரிவால் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன் என பிரபல ஆர்.ஜே பிளேடு தீனா ட்வீட் போட்டிருக்கிறார்.

பிரேம் குமார் இரங்கல்

பிரேம் குமார் இரங்கல்

பிரபல சின்னத்திரை நடிகரும் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கி வரும் பிரேம் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்.. ஷாக்கிங்.. ரொம்ப சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து விட்டாரே.. ஆழந்த இரங்கல்கள் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

செந்தில் இரங்கல்

செந்தில் இரங்கல்

நாடக கலைஞர் செந்தில் ப்ரோ ஹார்ட் பிரேக்கிங் நியூஸ்.. நாங்க உங்களை இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் மறைந்த ஆனந்த கண்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X