தள்ளிப்போகாதே பாடலை துள்ளித் துள்ளிப் பாடிய சித்ஸ்ரீராம்: வெங்கட் பிரபு என்ன சொன்னார்ன்னு தெரியுமா?

சென்னை: சிம்புவின் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடைமையடா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

Recommended Video

தள்ளிப்போகாதே பாடலை துள்ளித் துள்ளிப் பாடிய சித்ஸ்ரீராம்

குறிப்பாக சித் ஸ்ரீராம் பாடியிருந்த 'தள்ளிப் போகாதே' பாடல் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் மேடை நிகழ்ச்சியில் பாடியதை, இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்வீட்டரில் ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.

2K இசை ரசிகர்களின் சித்த வைத்தியர்

2K இசை ரசிகர்களின் சித்த வைத்தியர்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் கண்டுபிடிப்புகளில் பாடகர் சித் ஸ்ரீராமும் ரொம்பவே முக்கியமானவர். கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தவரை, ‘கடல்' படத்தில் இடம்பெற்ற ‘அடியே' என்ற பாடலின் மூலம் அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். மறைந்த பின்னணிப் பாடகர் சாகுல் ஹமீதின் லேட்டஸ்ட் வெர்ஷன் போலிருந்த சித் ஸ்ரீராமின் குரல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

டாப் கியரில் சென்ற சித் ஸ்ரீராம்

டாப் கியரில் சென்ற சித் ஸ்ரீராம்

ரஹ்மான் இசையில் தொடர்ந்து ஐ படத்தில் இடம்பெற்ற ‘என்னோடு நீ இருந்தால்', மெர்சல் படத்தில் ‘மாச்சோ' என சூப்பர் பாடல்களை பாடிய சித் ஸ்ரீராமுக்கு, தமிழில் ஏராளமான பாடல்களை பாடும் வய்ப்பு கிடைத்தது. அவர் பாடிய "மறுவார்த்தை பேசாதே' உட்பட பெரும்பாலான பாடல்கள் அமர்க்களமான ஹிட் கொடுத்தன.

தள்ளிப் போகாதே பாடல் செய்த மேஜிக்

தள்ளிப் போகாதே பாடல் செய்த மேஜிக்

சித் ஸ்ரீராம் குரலில் ரசிகர்களை பிரமிக்க வைத்த பாடலில் மிக முக்கியமானது ‘அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப் போகாதே' பாடல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியிருந்த இந்தப் பாடல், சித் ஸ்ரீராமுக்கு பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. வித்தியாசமான இசைப் பின்னணியில் உருவான இப்பாடலை, சித் ஸ்ரீராம் இன்னும் புதுமையாக பாடியிருப்பார்.

மேடை நிகழ்ச்சியில் உற்சாகமான சித் ஸ்ரீராம்

மேடை நிகழ்ச்சியில் உற்சாகமான சித் ஸ்ரீராம்

உலகம் முழுவதும் பல்வேறு மேடை இசை நிகழ்ச்சிகளில் பாடிவரும் சித் ஸ்ரீராம், எல்லா இடங்களிலும் ‘தள்ளிப் போகாதே' பாடலை கண்டிப்பாக பாடிவிடுகிறார். அப்படியொரு மேடை நிகழ்ச்சியில் ‘தள்ளிப் போகாதே' பாடலை பாடிய சித் ஸ்ரீராம், திடீரென உற்சாகமாகி மேடையில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து ரகளை செய்திருக்கார்.

வெங்கட் பிரபுவிடம் சிக்கிய சித் ஸ்ரீராம்

வெங்கட் பிரபுவிடம் சிக்கிய சித் ஸ்ரீராம்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இதனை பார்த்த வெங்கட் பிரபு, சித் ஸ்ரீராமை தரமாக கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். குறிப்பிட்ட மத வழிபாட்டு நிகழ்ச்சியில், பாடலை பாடியபாடி கூட்டமாக பலர் துள்ளிக் குதிக்கும் வீடியோவை, சித் ஸ்ரீராமின் வீடியோவுடன் எடிட் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இதை தனது ட்வீட்டரில் ஷேர் செய்துள்ள வெங்கட் பிரபு, "என்ன தரமான எடிட்டிங்" என பாராட்டி ஸ்மைலி எமோஜிகளை அடுக்கியுள்ளார். அவரின் இந்த ட்வீட், பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X