அநியாயம் பண்ணாதீங்க.. GOAT வெங்கட் பிரபுவை காண்டாக்கிய விஜய் ரசிகர்கள்?.. வேலை செய்ய விடுங்கப்பா
சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாகவும் கிராஃபிக்ஸ் பணிகள் அடுத்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் GOAT அந்த நிறுவனத்துக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

GOAT ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஷூட் செய்யப்பட்டு கடைசியாக கேரளாவுக்கு சென்றது படக்குழு. அங்கு விஜய்க்கும், வெங்கட் பிரபுவுக்கும் உச்சக்கட்ட வரவேற்பை அளித்தார்கள் கேரள ரசிகர்கள். அதனைப் பார்த்து ஒட்டுமொத்த மல்லுவுட்டும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கேரள ரசிகர்கள் மத்தியில் விஜய் உரையாடவும் செய்தார். அந்தப் பேச்சும் பெரும் ரெஸ்பான்ஸை பெற்றது.
GOAT கதை என்ன?: இதற்கிடையே GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் தீயாக பரவின. ஆனால் அதெல்லாம் இல்லை இது முழுக்க முழுக்க ஒரிஜினல் கதைதான் என்று வெங்கட் பிரபு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடுகின்றன. பொதுவாக டைம் ட்ராவலை மையமாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
மெகா ஹிட் பார்சல்: விஜய்யும் அவரது ரசிகர்களும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். ஏனெனில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. எனவே இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெஸ்ட்டாக கொடுத்துவிட வெங்கட் பிரபுவும் பொறுப்புணர்வுடன் தீயாக வேலை செய்துவருகிறாராம். படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று வெங்கட் பிரபுவும் தெரிவித்திருப்பதால் கண்டிப்பாக ஒரு ட்ரீட் இருக்கிறது. மெகா ஹிட் பார்சல்தான் என தளபதி ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்டேட் எப்போ: இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்தாலும் படத்திலிருந்து அப்டேட் எதுவும் வரவில்லையே என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். GOAT படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்படி உருவானது என்பது குறித்த புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். அது வரவேற்பை பெற்றாலும் எங்களுக்கு பெரிய அளவிலான அப்டேட் வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.
வெங்கட் பிரபு ட்வீட்: இந்நிலையில் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில், "அநியாயம் பண்ணாதீங்க.. அப்டேட் மிக விரைவில் நண்பாஸ், நண்பிஸ்..என்னை நம்புங்கள் மிக சிறப்பான அப்டேட் விரைவில்" என ட்வீட் செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் விஜய் ஃபேன்ஸ் செய்த செயலால் வெங்கட் பிரபு காண்டாகிட்டார் போலயே. அவரை கொஞ்சம் வேலை பார்க்க விடுங்கப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். தற்போது வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டும் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











