இது யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ட்ரெண்டிங் வீடியோ

சென்னை: இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோவை பகிர்ந்து இது யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.

அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாக அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா

முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா

கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட யுவன் ஷங்கர் ராஜா மெலோடி, வெஸ்டர்ன், ஃபோக் என அனைத்து விதமான இசையையும் தனித்துவமாக கொடுத்தார். இதனால் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக செல்வராகவன், ராம், அமீர், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு உள்ளிட்டோருடன் அவர் அமைத்த கூட்டணி தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுகிறது.

வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா

வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா

வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்தார் வெங்கட் பிரபு. அந்தப் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இதனால் இந்தக் கூட்டணிக்கென்று எதிர்பார்ப்பும், ரசிகர் பட்டாளமும் உருவானது.

வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் ஹிட்

வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் ஹிட்

சென்ன 28 படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ், மாநாடு என அனைத்து படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் யுவன் ஷங்கர் ராஜாவை வேறு விதமாக காட்டியது. குறிப்பாக மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் ரசிகர்களை கட்டிப்போட்டது என்பதுதான் உண்மை.

கோடான கோடி சரோஜா ரசிகர்கள்

கோடான கோடி சரோஜா ரசிகர்கள்

இதற்கிடையே சரோஜா படமும் மெகா ஹிட்டாக அதில் இடம்பெற்ற கோடான கோடி பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட். இந்நிலையில் அந்தப் பாடலை கல்லூரி மாணவர்கள் பேருந்து ஒன்றில் பாடியபடியும் நடனம் ஆடியபடியும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவை பகிர்ந்த ஒருவர் வெங்கட் பிரபுவை டேக் செய்திருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக்

யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக்

அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, இது கண்டிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக் மற்றும் கல்யாண் மாஸ்டரின் நடன அமைப்பாலும் இந்தப் பாடல் இன்னமும் ட்ரெண்டாகிவருகிறது. என்ஜாய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வெங்கட் பிரபு - யுவனின் அடுத்த படம்

வெங்கட் பிரபு - யுவனின் அடுத்த படம்

வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து இப்போது கஸ்டடி என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் தமிழ் தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துவருகின்றனர். இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X