உடன்பிறப்புகள் தினம்.. வெங்கட் பிரபு போட்ட ட்வீட்.. தல தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் ஸ்டார்ட்!

சென்னை: உலகம் முழுவதும் இன்று உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Vishal Vishal Jwala Gutta Announced Marriage date | Lock Down

இந்த கொரோனா கலவரத்தில் தீபாளி, பொங்கல் வந்தாலே ஒண்ணும் இல்லாமல் போயிருக்கும், இதுல Siblings Day வேறயா? என நினைப்பவர்களும் உண்டு.

உடன்பிறப்புகள் தினத்தைக் கொண்டாடும் நோக்கில், இயக்குநர் வெங்கட் பிரபு தல தளபதியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.

தல தளபதியுடன்

உலகளவில் சகோதரர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளாமல் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என தல தளபதியுடன் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, உடன்பிறப்புகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆயிரம் கோடி வசூல்

இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட இந்த ட்வீட்டை பார்த்தவுடன் எதிர்பார்த்தபடியே விஜய், அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர். விஜய், அஜித் இணைந்து நடித்தால், அந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் 1000 கோடியை தாண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த காம்போ

மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர் விஜய்யுடன் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட இந்த த்ரோ பேக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த மூன்று பேர் காம்போவில் சீக்கிரமே ஒரு படம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அது மங்காத்தா 2 வாக இருந்தால் வேற லெவல் என்கின்றனர்.

ரியல் உடன்பிறப்புகள்

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபுவின் ரியல் உடன்பிறப்பான பிரேம்ஜியின் புகைப்படத்தை பகிர்ந்து சில ரசிகர்கள், உடன்பிறப்புகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளையராஜாவின் வாரிசுகளான யுவன் சங்கர் ராஜா, பவதாரணி, கார்த்திக் ராஜா, வாசுகி பாஸ்கர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.

விஜய்யுடன்

தல அஜித்துடன் மங்காத்தா படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, சீக்கிரமே தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என சில விஜய் ரசிகர்களும், வெங்கட் பிரபு ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இளைஞர்களை ஈர்க்கும் விதமாக படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவுடன் விஜய் நடித்தால் சூப்பராக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

கால்ஷீட் வாங்கிடுங்க

தெய்வமே வெங்கட் பிரபு, அப்படியே தளபதி விஜய் மற்றும் தல அஜித் கிட்ட கால்ஷீட் வாங்கி, மங்காத்தா 2 படத்தை முடிச்சு விடுங்க என இந்த தீவிர ரசிகர் வடிவேலு தீபாராதனை காட்டும் வீடியோவை போட்டு செம சூப்பரா கமெண்ட் செய்துள்ளார்.

வானத்தை போல

வெங்கட் பிரபுவின் Happy Siblings day ட்வீட்டுக்கு கீழே, வானத்தை போல படத்தில் விஜயகாந்த், தனது தம்பிகள் மழையில் நனையாமல் இருக்க இரவு முழுவதும் விழித்திருந்து பாதுகாக்கும் செம புகைப்படத்தை பதிவிட்டு இந்த ரசிகர் இனிய சிபிலிங்ஸ் தின வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து கலகலப்பாக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X