திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும்.. வெங்கட் பிரபுவின் இரண்டு படைப்புகள்!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் வெங்கட் பிரபு.
சென்னை 600028, கோவா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் வெங்கட் பிரபு.
இன்று வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் திரையரங்கில் குட்டி ஸ்டோரி திரைப்படமும், ஹாட் ஸ்டாரில் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரும் வெளியாகியுள்ளது.

Anthology திரைப்படம்
வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி, கவுதம் மேனன், விஜய் இயக்கத்தில் anthology திரைப்படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் குட்டி ஸ்டோரி. இதில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், மேகா ஆகாஷ், வருண், வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வீடியோ கேம்
குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபுவின் பாகம் வித்தியாசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோ கேம்மிங்கை வைத்து காதல் கதையை புதிதாக முயற்சித்துள்ளார் வெங்கட் பிரபு. இது இந்திய சினிமா வரலாற்றில் புது வித முயற்சியாகும்.

ஹாரர் கதைக்களம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் நேரடியாக ஹாட் ஸ்டார் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ள வெப் தொடர் "லைவ் டெலிகாஸ்ட்". இந்த வெப் தொடரானது ஹாரர் கதைகளத்தை கொண்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக காஜல் அகர்வால் மற்றும் குழுவினர் செல்கின்றனர். அப்போது அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் தான் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் கதை. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











