விஜய்யை மொத்தமாக வச்சு செய்யப் போறாரு வெங்கட் பிரபு.. எக்ஸ்பெக்டேஷனே வேண்டாம்.. பிரபலம் பகீர்!
சென்னை: அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு என மாஸ் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தளபதி விஜய்க்கும் அப்படி ஒரு தியேட்டர் தெறிக்கும் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் லியோ படத்தை விட அதிக எக்ஸ்பெக்டேஷனை தளபதி 68 படத்தின் மீது வைத்து வரும் நிலையில், அந்த படம் அப்படியெல்லாம் இருக்காது என்றும் வாரிசு படத்தை போல லைட் ஹார்டட் படமாகத்தான் இருக்கும் என பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தொடர்ந்து படு மாஸான படங்களில் நடிக்க மாட்டார் என்றும் வெறித்தனமாக ஒரு படம் வந்தால் குடும்பங்களை கவரக்கூடிய ஒரு படத்தை கண்டிப்பாக கொடுப்பார்.

அந்த படங்கள் ஹிட் அடித்தாலும், மிஸ் ஆனாலும் அவருக்கு கவலையே இல்லை அப்படியொரு படமாகத்தான் தளபதி 68 இருக்குமாம்.
வசீகரா வாடை வருது: இயக்குநர் வெங்கட் பிரபு காமெடி படங்களை எப்படி இயக்குவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் விஜய்யும் காமெடி படங்களில் இதற்கு முன்னதாக பல படங்களில் கலக்கி உள்ளார். வாரிசு படமே குழந்தைகள் மற்றும் குடும்பங்களை டார்கெட் செய்து தான் விஜய் எடுத்தார் என்றும் ஆனால், இயக்குநர் வம்சி கதை சொன்ன அளவுக்கு திரைக்கதையையும் மேக்கிங்கையும் செய்யாமல் போனது தான் அந்த படம் சொதப்ப காரணம் என அந்தணன் கூறியுள்ளார். விஜய்யின் தளபதி 68 படம் வசீகரா படம் போல வரும் என்றும் வேறலெவல் காமெடி விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அப்போ டைம் மெஷின்: டைம் மெஷினை வைத்து தான் இந்த படத்தில் மரண காமெடியை வெங்கட் பிரபு விஜய்க்காக பிளான் செய்துள்ளார் என்றும் இந்த படம் லியோ படம் போல பிரம்மாண்ட பட்ஜெட் படமோ ஆக்ஷன் படமோ கிடையாது. ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தால் நிச்சயம் அவர்களை திருப்திப்படுத்தும் படமாக ஒரு ஜாலியான விஜய் படமாக இருக்கும் என்றும் அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். எப்படியிருந்தாலும், விஜய் தனது ரசிகர்களை எப்போதும் போல ஏமாற்ற மாட்டார் என்றும் தளபதி 68 படம் தரமாக வரும் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











