Venkat Prabhu Salary: விஜய்க்கு 200 கோடி.. எனக்கு இவ்ளோ தானா.. டென்ஷனான தளபதி 68 இயக்குநர்?

சென்னை: தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு கட்டியிருந்த மனக்கோட்டை எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், வெங்கட் பிரபுவுக்கு இந்த படத்தை இயக்க எத்தனை கோடி சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

Venkat Prabhu will receive a low salary for Thalapathy 68 details leaked?

ஹீரோக்களுக்கு மட்டுமே அதிகம்:

சினிமாவில் என்ன தான் இயக்குநரை கேப்டன் ஆஃப் தி ஷிப் என்று சொன்னாலும், அதிக சம்பளம் இயக்குநருக்கு ஒரு போதும் தருவதில்லை. அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் யாருக்காக வருகின்றனரோ அந்த ஹீரோவுக்குத் தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஹீரோவை தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் அதன் பிறகு தான் இயக்குநருக்கான சம்பளம் என்றும் ஹீரோயின்களை பொறுத்தவரையில் பெரிய நடிகைகளுக்கு ஒரு சம்பளமும் இளம் ஹீரோயின்களுக்கு குறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது.

விஜய்க்கு 200 கோடி:

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் விஜய்க்கு இதுவரை இந்திய சினிமாவில் எந்த நடிகருக்கும் வழங்கப்படாத பெரிய சம்பளத்தை பேசி உள்ளதாக கூறுகின்றனர்.

டிசி நிறுவனமே டுவைன் தி ராக் ஜான்சனுக்கே அதிகபட்சம் 186 கோடி ரூபாய் தான் பிளாக் ஆடம் படத்திற்கு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்க்கு தளபதி 68ல் 200 கோடி ரூபாய் சம்பளமாம்.

Venkat Prabhu will receive a low salary for Thalapathy 68 details leaked?

வெங்கட் பிரபு சம்பளம்:

இந்நிலையில், விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கிறாங்களே நமக்கு ஒரு 10 பர்சன்ட் 20 கோடியாவது கொடுப்பாங்க என கனவு கண்டு கொண்டிருந்த வெங்கட் பிரபுவுக்கு இந்த படத்தை இயக்க வெறும் 10 கோடி ரூபாய் தான் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் வெளியான கஸ்டடி படம் படு தோல்வியை சந்தித்த நிலையில் தான் இந்த அளவுக்கு அவருக்கான சம்பளம் குறைந்து விட்டது என்கின்றனர். இதனால், சற்றே மன வருத்தத்தில் வெங்கட் பிரபு உள்ளாராம். ஆனால், தளபதி 68 ஹிட் அடித்து விட்டால், அவர் சொல்றது தான் அடுத்து சம்பளம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X