இதை பார்த்தாவது சிம்பு கல்யாணம் பண்ணட்டும்.. பங்கமாக கலாய்த்த வெங்கட் பிரபு.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: நடிகர் பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
முதலில் திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெறும் என அறிவித்தனர். ஆனால், கடைசியாக மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் உள்ளிட்ட ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற திருமணமாக அது நடைபெற்றது.

ஆனால், பிரேம்ஜியின் திருமணம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் எளிமையான திருமணம் என வெங்கட் பிரபு தற்போது அறிவித்துள்ளார். மேலும், தனது தம்பியின் திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு சிம்புவின் திருமணம் குறித்தும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கங்கை அமரன் மகன்: இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். ஆரம்பத்தில் வெங்கட் பிரபு சினிமாவில் நடிகராக நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவர் இயக்குநராக மாறிவிட்டார். அவரது சகோதரர்பிரேம்ஜி தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார். சில பாடல்களை பாடியுள்ள அவர், இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நயன்தாரா திருமண நாள்: வரும் ஜூன் 9ம் தேதியுடன் நடிகை நயன்தாரா திருமணமாகி 2 ஆவது திருமண நாளை கொண்டாட காத்திருக்கிறார். இந்நிலையில் அதே நாளில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான பிரேம்ஜி திருமணம் நடைபெற உள்ளது. திருத்தணியில் மிகவும் எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணமாக அது இருக்கும் என அறிவித்துள்ளனர். மீடியா மற்றும் ரசிகர்கள் என யாருமே வந்துடாதீங்கப்பா என்கிற ரேஞ்சுக்கு வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனாலும், ஜூன் 9ம் தேதி திருத்தணிக்கு ஏகப்பட்ட பேர் படையெடுத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
சிம்புவும் பண்ணா நல்லா இருக்கும்: இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு பிரேம்ஜியின் திருமணம் 90ஸ் கிட்ஸுக்கு ஊக்கமாக இருக்கும் என தொகுப்பாளினி சொல்ல, இதை பார்த்தாவது சிம்பு திருமணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்கும் என கலாய்த்துள்ளார். சிம்புவுக்கு மாநாடு என்கிற வெற்றிப் படத்தை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். மேலும், சிறுவயதிலிருந்து இருவரும் நண்பர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முரட்டு சிங்கிள்கள்: பாலிவுட்டில் சல்மான்கான் இருப்பதைப்போல தமிழ் சினிமாவில் இன்னமும் முரட்டு சிங்கிள்களாக சிம்பு, விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் உள்ளனர். சீக்கிரமே அவர்களுக்கும் திருமணம் ஆக வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
விஜய் வருவாரா?: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. கோட் படத்தின் இயக்குநரின் தம்பியின் திருமணத்திற்கு நடிகர் விஜய் வருவாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருத்தணியில் திருமணத்தை முடித்துவிட்டு சினிமா பிரபலங்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை எப்போது நடத்தப் போகின்றனர் என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











