தொடர்ந்து முன்னிலை.. உங்க அப்பா ஆசி இருக்கு.. விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!

சென்னை: தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நடிகரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வசந்த் அண்ட் கோ நிறுவனரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச். வசந்த குமார் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

வசந்த குமார் மறைவை தொடர்ந்து முழு நேர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு

பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு

பாஜகவை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நடிகர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் வசந்த் முன்னிலை

விஜய் வசந்த் முன்னிலை

அப்பா வசந்த குமார் மறைவுக்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறிய விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 46,886 வாக்குகள் பெற்று விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

வெங்கட் பிரபு வாழ்த்து

வெங்கட் பிரபு வாழ்த்து

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் நடித்த விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் வசந்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அப்பாவோட ஆசி

அப்பாவோட ஆசி

மேலும், தனது ட்வீட்டில், மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.. உங்கள் அப்பாவின் ஆசி உங்களுக்கு வெற்றியை பரிசளிக்கும் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான விஜய் வசந்தை வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X