இந்த ஆண்டு மத கஜ ராஜா.. அடுத்த ஆண்டு ‘பார்ட்டி’ படம் ரிலீஸ் ஆகுதாம்.. துருவ நட்சத்திரம் எப்போ வரும்?
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலையில், பல ஆண்டுகளாக அந்த படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் அந்த படத்தின் தயாரிப்பாளர் அமைதி காத்து வந்தார். படத்தை கொடுத்துடுங்க நாங்க ரிலீஸ் பண்ணிக்கிறோம் என விஷால் மற்றும் சுந்தர். சி தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத கஜ ராஜா படம் வெளியானது.
12 வருஷ பழைய படத்தை யார் பார்க்கப் போறா என நினைத்த நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான புதிய படங்களான வணங்கான், காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா உள்ளிட்ட படங்களை வீழ்த்தி பாக்ஸ் ஆபீஸில் அதிகபட்சம் 50 கோடி வரை வசூல் செய்து மத கஜ ராஜா வெற்றிக் கொடி நாட்டியது.

இந்நிலையில், 10 வருடங்களாக உருவாகி ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் பார்ட்டி படத்தை அடுத்த ஆண்டு வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப்ரவரியில் பார்ட்டி: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கனவே விஜய்யின் ஜன நாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பார்ட்டி திரைப்படத்தை வெளியிட வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்ட்டி திரைப்படம் வெளியானால் கண்டிப்பாக மத கஜ ராஜா படத்தை போல வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளத்தின் பார்ட்டி: சென்னை 28, கோவா, சரோஜா என ஜாலியான படங்களை எடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் அதே மோடில் எடுத்த படம் தான் பார்ட்டி. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசாண்ட்ரா, ஜெய், சிவா, ஜெயராம், மறைந்த நடிகர் மனோ பாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம் எப்போது?: பார்ட்டி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், சியான் விக்ரம் ரசிகர்கள் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்துக்கு ஏதாவது வழி பிறக்குமா என இயக்குநர் கெளதம் மேனனிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அந்த படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











