Yuvan Shankar Raja - யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்.. தளபதி 68 பற்றி வெங்கட் பிரபு சொன்னதை பாருங்க..!
சென்னை: Yuvan Shankar Raja Birthday (யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்) யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெங்கட் பிரபு போட்டிருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. சிறு வயதிலேயே அரவிந்தன் படத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்தார். அவரது இசையை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக இளையராஜாவின் பெயரை யுவன் ஷங்கர் ராஜா காப்பாற்றிவிடுவார் என்று ஆரூடம் கூறினர்.

பலித்த ஆரூடம்: அதன்படி அவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. முக்கியமாக அவரது இசை ரசிகர்களிடம் ரொம்பவே எளிதாக கனெக்ட் ஆனது. அதன் காரணமாக டாப் 10 இசையமைப்பாளர்கள் பட்டியலில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் நிரந்தரமான இடத்தை கொடுத்து இன்னமும் ரசித்துவருகின்றனர். யுவனின் இசை போதை என்றும், அவர் போதை சப்ளையர் என்று செல்லமாக ரசிகர்கள் கூறுவதுண்டு.
பெஸ்ட் காம்போ: இசையமைப்பாளருக்கு இயக்குநரும், பாடலாசிரியரும் செட் ஆகிவிட்டால் அவரது காட்டில் இசை மழைதான். அப்படித்தான் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு செல்வராகவன் - நா. முத்துக்குமார், விஷ்ணு வர்தன் - பா.விஜய், அமீர் - சினேகன், வெங்கட் பிரபு - வாலி என பக்கா டீம் செட் ஆனது. இவர்களில் ஒவ்வொரு காம்போவுக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பக்காவாக பொருந்திப்போய் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டடித்தன.
யுவன் பிறந்தநாள்: யுவனின் இசையில் கடைசியாக லவ் டுடே படம் வெளியானது. அந்தப் படத்தின் பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. இன்று அவர் தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து கூறிவருகின்றனர். யுவனின் பாடல் சம்பந்தமான எடிட்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
வெங்கட் பிரபு வாழ்த்து: இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வெங்கட் பிரபு தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். அந்தவகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி. தளபதி 68 படத்தில் உன்னுடைய சிறப்பான இசையை கேட்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தளபதி 68: வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்குகிறார். அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு யுவன் இசையமைத்துவிட்டார். ஆனால் தனது கரியரில் விஜய்யின் புதிய கீதை படத்துக்கு மட்டுமே இதுவரை இசையமைத்திருக்கிறார். எனவே தளபதி 68 மூலம் விஜய்யுடன் 20 வருடங்கள் கழித்து யுவன் இணைவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











