பிரேம்ஜி இயக்கத்தில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த படம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து இப்போது அடுத்த தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்

இந்த நிலையில் பிரேம்ஜி இயக்கத்தில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த படம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

சென்னை-28

சென்னை-28

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் இயக்குனர் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்த வெங்கட் பிரபு பிரபுவுக்கு அந்த படங்கள் சரியாக ஓடாததால் பின் ஒரு சில படங்களில் ஹீரோவுக்கு நண்பராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

அஜித்தின் 50வது படம்

அஜித்தின் 50வது படம்

இயக்கிய முதல் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. முழுக்க முழுக்க காமெடியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சென்னை 28 வெற்றி பெற்றதை தொடர்ந்து சரோஜா, கோவா என அடுத்தடுத்து இயக்கிய படங்கள் இவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அஜித்துடன் இணைந்து மங்காத்தா இயக்கினார். அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று பட்டையை கிளப்பியது மங்காத்தா வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

சூப்பர் ஹிட் வெற்றி

சூப்பர் ஹிட் வெற்றி

பிரியாணி,மாஸ் என்கிற மாசிலாமணி, உள்ளிட்ட சில படங்கள் வெங்கட்பிரபுவுக்கு சரியாக ஓடவில்லை இந்த நிலையில் சிம்புவுடன் இணைந்து மாநாடு என்ற படத்தை இயக்க ஆரம்பித்த வெங்கட்பிரபுவுக்கு பல தடைகள் அந்த படத்தில் ஏற்பட்டது. இதனால் படக்குழுவுக்கும் சிம்புவுக்கும் மிகப்பெரிய வாரே நடைபெற்றது. பின்னர் ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து படமும் வேற லெவலில் தயாராகி வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அடுத்து அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கில் நேரடியாக என்ட்ரி

தெலுங்கில் நேரடியாக என்ட்ரி

அடுத்ததாக தெலுங்கு படம் துறையில் நேரடியாக என்ட்ரி கொடுக்கும் வெங்கட் பிரபு நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. வெங்கட் பிரபு மற்றும் தம்பி பிரேம்ஜி அமரன் என இருவரும் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். பிரேம்ஜி நடிகராகவும் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் இருந்தாலும் அவர் இசையமைப்பாளராக வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது. மன்மதலீலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெங்கட் பிரபுவை ஹீரோவாக

வெங்கட் பிரபுவை ஹீரோவாக

இந்த நிலையில் வெங்கட் பிரபுவை ஹீரோவாக வைத்து வான்டட் என்ற படத்தை பிரேம்ஜி இயக்கியுள்ளார். முழுவதும் வித்தியாசமான கதை களத்தில் உருவான இந்த படம் இன்றுவரை வெளியாகவில்லை. ஆனால் கதை சூப்பராக இருக்கும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் வெங்கட்பிரபுவை ஹீரோவாக வைத்து பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வான்டட் படம் வெளியாகவில்லை என்றால் அதே படத்தை கொஞ்சம் ஆல்டர் செய்து தானே இயக்க இருப்பதாக வெங்கட் பிரபு சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X