twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை அறிமுகப்படுத்தியது வெங்கட்பிரபு இல்லை.. பிரேம்ஜி நடிகராக உதவியவர் யார் தெரியுமா!

    |

    சென்னை: சாமி பாடல்கள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிரேம்ஜி இப்போது சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்

    குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் பிரேம்ஜி கட்டாயமாக இடம் பெறுவார்

    சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரேம்ஜி சினிமாவில் என்னை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது வெங்கட் பிரபு இல்லை எனக் கூறியுள்ளார்.

    அந்தப் படத்தை பார்த்துவிட்டு வியந்து போனேன்... பா. ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட்பிரபு!அந்தப் படத்தை பார்த்துவிட்டு வியந்து போனேன்... பா. ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட்பிரபு!

    வெங்கட்பிரபு இயக்கத்தில்

    வெங்கட்பிரபு இயக்கத்தில்

    மூத்த நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்ட இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் நடிகர் பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார். இசையமைப்பாளராக ஆகவேண்டும் என எண்ணத்தில் இருந்தவர் . பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடியனாக இருந்து வருகிறார். குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் கட்டாயமாக இருப்பார். அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான 600028 படத்தில் நடித்தது மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

    காமெடி நடிகராக

    காமெடி நடிகராக

    அதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா,பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு என அனைத்து படங்களிலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதே நேரம் அதே இடம், மன்மதலீலை உள்ளிட்ட சில படங்களுக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்தும் உள்ளார்.

    வெங்கட்பிரபு அறிமுகம் செய்யவில்லை

    வெங்கட்பிரபு அறிமுகம் செய்யவில்லை

    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் பிரேம்ஜி நடித்துள்ளதால் வெங்கட் பிரபுதான் பிரேம்ஜியை அறிமுகம் செய்தார் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கையில் தன்னை வெங்கட்பிரபு அறிமுகம் செய்யவில்லை என பிரேம்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

    சிம்புதான் என்னை நடிக்க வைத்தது

    சிம்புதான் என்னை நடிக்க வைத்தது

    மேலும் அதில் கூறியுள்ளதாவது என்னை வெங்கட்பிரபு நடிகராக அறிமுகப்படுத்தவில்லை நான் இசையமைப்பாளராக ஆசைப்பட்டேன் அதனால் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தான் சிம்பு என்னை அழைத்துச் சென்று நான் வல்லவன் என்ற படத்தை இயக்கப் போகிறேன் அதில் வந்து நடி என அழைத்தார். சிம்புதான் ஏவிஎம் ஸ்டுடியோவில் என்னை முதல் முறையாக வல்லவன் படத்தில் நடிக்க வைத்து நடிகராக அறிமுகப்படுத்தியது என்ற தகவலை தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Venkat Prabu have not introduced me in cini field Says Premji
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X