அஜீத்தின் வீரத்துடன் பிரியாணியை மோதவிட விரும்பாத வெங்கட் பிரபு?
சென்னை: அஜீத் குமாரின் நட்பை பெரிதாக மதிக்கும் வெங்கட் பிரபு அவரின் வீரம் படத்துடன் தனது பிரியாணி படத்தை மோதவிட விரும்பவில்லையாம்.
வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தாவை எடுத்த பிறகு கார்த்தியை வைத்து பிரியாணியை எடுத்தார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் குமார் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியதால் என்னவோ வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு அதுவே பெயராகிவிட்டது.
பிரியாணி ரம்ஜானுக்கே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீபாவளியும் வரப் போகுது
ரம்ஜானுக்கு வர வேண்டிய பிரியாணி தீபாவளி வரும் வேளையிலும் ரிலீஸ் ஆவது போன்று தெரியவில்லை.

பொங்கலுக்கு வீரம்
அஜீத் குமாரின் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிகறது. மேலும் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு வருகிறது.

அஜீத்தின் நட்பு
அஜீத் குமார், வெங்கட் பிரபு இடையே நெருங்கிய நட்பு உள்ளது. அவர்களின் குடும்பத்தாரும் நட்பாக உள்ளனர். அஜீத்தின் நட்பை பெரிதாக நினைப்பவர் வெங்கட் பிரபு.

மோத வேண்டாம்
நட்பின் காரணமாக அஜீத்தின் வீரம் படத்துடன் பிரியாணியை மோதவிட விரும்பவில்லையாம் வெங்கட் பிரபு.

ஊசிப் போவதற்கு ரிலீஸ் பண்ணுங்க
ஆனால் படக்குழுவோ பிரியாணை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று கூறகிறதாம்.


Click it and Unblock the Notifications











