பெரிய குடும்பத்து வீட்டுப் பெண் திருமணம்.. மகள் கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்திய வெங்கடேஷ் டகுபதி!

ஹைதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் டகுபதி தனது இரண்டாவது மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார். திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

1971ம் ஆண்டு வெளியான பிரேமா நகர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெங்கடேஷ் 1986ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான கலியுக பாண்டவாலு படத்திற்காக சிறந்த அறிமுக நாயகன் விருதை ஆந்திரா மாநிலம் சார்பாக வழங்கப்படும் நந்தி விருது விழாவில் பெற்றார்.

Venkatesh Daggubati Second Daughter Hayavahini ties the knot with Nishanth

பிரம்ம புத்ருடு, பிரேமா, சூர்ய வம்சம், ராஜா, சீனு, ஜெமினி, ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தலு வேருலே (யாரடி நீ மோகினி), த்ரிஷ்யம், த்ரிஷயம் 2, சைந்தவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராணா டகுபதி உடன் இணைந்து இவர் நடித்த ராணா நாயுடு வெப்சீரிஸ் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ் குடும்பம்: டோலிவுட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனாவை போல முன்னணி நடிகரான வெங்கடேஷின் குடும்பமும் பெரிய குடும்பம் தான். அதிக படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ராமா நாயுடுவின் மகன் தான் வெங்கடேஷ். 1985ம் ஆண்டு நீரஜா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட வெங்கடேஷ் டகுபதிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

Venkatesh Daggubati Second Daughter Hayavahini ties the knot with Nishanth

இரண்டாவது மகள் திருமணம்: மூத்த மகள் ஆஷ்ரித்தாவை விநாயக் ரெட்டி என்பவருக்கு திருமணம் செய்துக் கொடுத்தார். ஹைதராபாத் ரேஸ் கிளப்பின் முதலாளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மார்ச் 15ம் தேதி தனது 2வது மகள் ஹயாவாகினியை நிஷாந்த் என்பவருக்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார். நிஷாந்தின் பெற்றோர்கள் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா ஸ்டூடியோவில் திருமணம்: ஹைதராபாத்தின் பிரபல ராமா நாயுடு ஸ்டூடியோவிலேயே தனது இளைய மகளின் திருமணத்தை நேற்று பிரம்மாண்டமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை மட்டும் அழைத்து நடத்தியிருக்கிறார் வெங்கடேஷ் டகுபதி.

ராணா டகுபதி: வெங்கடேஷ் டகுபதியின் மருமகன் தான் ராணா டகுபதி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதே போலன் நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யாவும் இவரது உறவினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கடேஷ் டகுபதியும் சென்னையில் பிறந்து லயோலா கல்லூரியில் படித்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ஆனவர் தான்.

Venkatesh Daggubati Second Daughter Hayavahini ties the knot with Nishanth

மணக்கோலத்தில் மகள்: வெங்கடேஷ் டகுபதியின் இரண்டாவது மகள் ஹயாவாகினி நிஷாந்த் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. மெஹந்தி, சங்கீத் என கடந்த சில நாட்களாகவே இவரது திருமணம் களைகட்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜயவாடாவில் பிரம்மாண்டமாக தனது மகளின் நிச்சயதார்த்தத்தை வெங்கடேஷ் நடத்தியிருந்தார். இந்நிலையில், பிரம்மாண்டமாக திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார்.

சைந்தவ் தோல்வி: இந்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு வெளியான வெங்கடேஷின் சைந்தவ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தை விட படுமோசமாக சைந்தவ் இருந்த நிலையில், கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் தமிழ் டப்பிங்கையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ராணா நாயுடு 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X