அவர் தான் பண்ணனும்.. ஒரே முடிவில் அந்த பிரபல நடிகர்.. மார்ச் மாதம் தொடங்குகிறது திரிஷ்யம் 2 ரீமேக்!

ஹைதராபாத்: மோகன் லால் நடிப்பில் வெளியாகி உள்ள திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தை ரீமேக் செய்ய உடனடியாக போட்டி ஆரம்பமாகி விட்டது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில், அன்சிபா ஹாசன், ஆஷா சரத் மற்றும் சித்திக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது திரிஷ்யம் 2.

படத்தை பார்த்த பொதுமக்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

தேவையில்லாமல்

தேவையில்லாமல்

ஏகப்பட்ட பார்ட் 2 படங்கள் தேவையில்லாமல் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சரியான கதையோடு கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது திரிஷ்யம் 2. ஆரம்பத்திலேயே போலீஸ் ஸ்டேஷனில் வருணின் உடலை மோகன் லால் புதைப்பதை ஒரு குற்றவாளி பார்ப்பதாக கதையை ஆரம்பித்து கதிகலங்க வைத்துள்ளார் இயக்குநர்.

போலீஸ் ஸ்டேஷனில் தோண்டிட்டாங்க

போலீஸ் ஸ்டேஷனில் தோண்டிட்டாங்க

போலீஸ் ஸ்டேஷனில் பிணத்தை யாரும் தோண்டி எடுக்க மாட்டாங்க என முதல் பாகத்தை பார்த்து மெய் சிலிர்த்த ரசிகர்களுக்கு இந்த இரண்டாம் பாகத்தில் போலீஸ் ஸ்டேஷனிலேயே தோண்டி எலும்பு கூடுகளை எடுத்த பின்னரும் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என செம ரிஸ்க்கான கதையை உருவாக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்பை சினிமா உலகம் கொண்டாடி வருகிறது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

2013ம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் கதை பிடித்துப் போக தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் செய்தார். தெலுங்கில் நடிகர் வெங்கடேஷும் இந்தியில் நடிகர் அஜய் தேவ்கனும் அந்த படத்தை ரீமேக் செய்து ஹிட் அடித்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் தெலுங்கில் இரண்டாம் பாகம் ரீமேக் ஆகப் போகிறது.

டோலிவுட் இயக்குநர்

டோலிவுட் இயக்குநர்

கடந்த 2014ம் ஆண்டு திரிஷ்யம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்திருந்தார் நடிகர் வெங்கடேஷ். அவருக்கு ஜோடியாக மீனாவும், ஆஷா சரத் கேரக்டரில் நதியாவும் நடித்திருந்தனர் அந்த படத்தை டோலிவுட் இயக்குநர் சுப்ரியா இயக்கி இருந்தார். தமிழில் வெளியான பாபநாசம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார்.

அந்த இயக்குநர் தான் வேண்டும்

அந்த இயக்குநர் தான் வேண்டும்

இந்நிலையில், தற்போது திரிஷ்யம் 2 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ள நடிகர் வெங்கடேஷ், மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பை வைத்தே இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

மார்ச்சில் தொடங்குகிறது

மார்ச்சில் தொடங்குகிறது

பெரிய பட்ஜெட் செலவில்லாமல் சிறிய பட்ஜெட்டில் செம திரில்லர் படமாக உருவாகி உள்ள திரிஷ்யம் படத்தை வரும் மார்ச் மாதம் தெலுங்கில் பூஜை போட்டு ரீமேக் செய்ய உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள்ளே தெலுங்கு திரிஷ்யமும் வெளியாகி பட்டையை கிளப்ப போகிறது. தெலுங்கில் உருவாகவுள்ள திரிஷ்யம் தியேட்டரில் வெளியாகும் என்கிற அறிவிப்பும் கிடைத்துள்ளது.

சுயம்பு லிங்கம் வருவாரா?

சுயம்பு லிங்கம் வருவாரா?

இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் பட வேலைகள் அப்படியே கிடப்பில் கிடக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் மட்டும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். ஒரு மாத காலத்தை ஒதுக்கினாலே பாபநாசம் 2 படத்தை உருவாக்கி சுயம்பு லிங்கத்தின் ஆட்டத்தை காட்டி விடலாம் என்கிற நிலையில் கமல் என்ன செய்ய போகிறார் என கோலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கெளதமிக்கு பதில் யார்?

கெளதமிக்கு பதில் யார்?

அப்படியே தமிழில் பாபநாசம் 2ம் பாகம் உருவானால் கெளதமி நடிப்பாரா? என்கிற கேள்வியும் கெளதமி நடிக்காத சூழலில் நடிகை மீனாவையே அந்த ரோலில் நடிக்க வைக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆப்ஷன் கொடுத்து வருகின்றனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் மீனா பாபநாசம் 2 படத்திலும் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X