Don't Miss!
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓடிடியில் வெளியாகும் த்ருஷ்யம் 2 படம்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு
ஐதராபாத் : வெங்கடேஷ் -மீனா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ளது த்ருஷ்யம் 2 படம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகும் பிரபல நடிகை... யாருக்கூடன்னு பாருங்க!
இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

த்ருஷ்யம் படம்
நடிகர் வெங்கடேஷ் -மீனா நடிப்பில் கடந்த 2013ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் த்ருஷ்யம். மலையாளத்தில் மோகன்லால் -மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சுப்ரியா. இந்நிலையில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகம் கடந்த பிப்ரவரியில் ரிலீசானது.

இரண்டாவது பாகம் ரெடி
இதேபோல தெலுங்கிலும் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. தமிழில் கமல், கவுதமி உள்ளிட்டோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தொடர்ச்சியாக 2வது பாகம்
முதல் பாகத்தில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பிரச்சினையை எவ்வாறு ஹீரோ எதிர்கொண்டு தன்னுயை குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதாக கதை நகரும். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தை காக்கும் நாயகன்
முதல் பாகத்தில் காவல்நிலையத்தில் புதைக்கப்படும் காவல் அதிகாரி நதியாவின் மகன் பிணத்தை ஒருவர் பார்ப்பதாக இரண்டாவது பாகம் துவங்குகிறது. இந்த பிரச்சினையில் இருந்தும் தன்னுடைய குடும்பத்தை எவ்வாறு ஹீரோ மீட்டெடுக்கிறார் என்பதாக படம் நகர்கிறது.

குறைந்த பட்ஜெட்
இதனிடையே, தெலுங்கில் உருவாகியுள்ள த்ருஷ்யம் 2 படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் சில மாதங்களிலேயே சூட்டிங் முடிக்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் 25ம் தேதி படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

ட்ரெயிலர் ரிலீஸ்
இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் எவ்வாறு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை இந்த ட்ரெயிலரைக் கொண்டு ரசிகர்கள் அறிந்துக் கொள்ள முடியும். இந்தப் படம் தமிழில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தமிழிலும் இரண்டாவது பாகம் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.