கன்னட படத்தில் சுஹாசினியுடன் வெங்கடேஷ் பிரசாத் ரொமான்ஸ்?
பெங்களூர்: சச்சின் டெண்டுல்கர் அல்லா என்னும் கன்னட படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சுஹாசினி மணிரத்னத்தை காதலிக்கும் காட்சிகளில் நடிக்கிறாராம்.
சச்சின் டெண்டுல்கர் அல்லா என்ற கன்னட படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எஸ். மோகன் இயக்கி வரும் இப்படம் கன்னட திரையுலகில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறுவன்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் போல ஆக வேண்டும் என்று ஆசைப்படும் சிறுவனைப் பற்றிய படம் தான் சச்சின் டெண்டுல்கர் அல்லா.

அம்மா
கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்கத் துடிக்கும் சிறுவனின் அம்மாவாக சுஹாசினி நடிக்கிறார். இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரசாத்
வெங்கடேஷ் பிரசாத் படத்தில் சுஹாசினியின் மகனாக நடிக்கும் சிறுவனுக்கு கிரிக்கெட் பயிற்சியாளராக வருகிறாராம்.

காதல்
படத்தில் வெங்கடேஷ் பிரசாத்துக்கும், சுஹாசினிக்கும் இடையே காதல் காட்சிகள் கூட உண்டு என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











